பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

103


ஆகவே, குடி உயர, குடி கெடாமல் காத்திட, ஒவ்வொரு மனிதருக்கும் பொறுப்பு வேண்டாமா? ஆகவே, குடும்பம் கெடுவதற்குத் தன் உடம்பு கெடுவதுதான் முதல் காரணம் என்பதால், குடியை ஒழித்துக் குடியைக் காப்போம்.


108. பெண் புத்தி பின் புத்தி

பெண் என்பவள் எண்ணிப் பார்க்காமல் ஒரு காரியத்தைச் செய்து விடுவாள். செய்த பிறகு ஏற்படுகிற விளைவுகளைக் கண்ட பிறகு அது பற்றிச் சிந்திப்பாள் என்பதுதான் இந்தப் பழமொழிக்கு எல்லோரும் அர்த்தம் சொல்கிறார்கள்.

இதற்குப் பெயர் அர்த்தமல்ல. அனர்த்தம்.

பெண்களைக் கேலிப் பொருளாகவும் ‘ஜோலி’ப் பொருளாகவும் எண்ணுகிற மேதாவிகளுக்கு இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. அவர்கள் உடல் அமைப்பும் இப்படித்தான் எண்ணத் தூண்டுகிறது.

பெண் என்ற சொல் பேண் என்ற சொல்லிலிருந்து ஏகாரம் குறைந்து குறுகிப் போயிருக்கிறது.

பேண் என்றால் பாதுகாப்பவள் என்பது அர்த்தம். அதாவது பேணுதல் என்ற சொல்லிலிருந்து பிறந்தது. ஆண் என்று ஆரம்பமான அந்த வார்த்தை அப்படியேதான் இருக்கிறது. அண் என்றால் அணுகு என்று அர்த்தம்.

அதிகமாக அணுகுகிறவர்களையே ஆண் என்றனர் போலும். பேணுகிற மனுஷி பெண் ஆனாள்.