பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

105


மகிழ்ச்சியும் ஏற்படலாம். மன உறுத்தலும் உண்டாகலாம். மனதை மாற்றுவது தான் மாபாவிகளுக்குக் கை வந்த கலையாயிற்றே.

அயலாருக்கு அநியாயங்கள் ஆயிரம் செய்தாலும், அதற்கு மனதில் துன்பம் வரலாம். ஆனால், அது மரணத்தைத் தராது. என்னைப் பொறுத்தவரை, பாவம் என்பது, தனக்கே தான் செய்து கொள்கிறதடித்தனமான செயல்கள். தொடர்ந்து உடலைப் பாதிக்கும் தீவினைகள். தன் அங்கத்தைப் பங்கப் படுத்துகிற அட்டகாசங்கள் ஆத்மாவைக் கலங்கடிக்கும் அக்கிரமங்கள்.

இவற்றால் தான் மரணம் ஏற்படுகிறது. மரணம் என்றால் இறப்போ, சாவோ அல்ல. அத காலந் தருகிற காயம். நேரம் ஏற்படுத்துகிற புண். மனம் உண்டாக்குகிற போர். இது எப்படி? ம என்றால் காலம், நேரம் என்றும்; ரணம் என்றால் காயம், புண் என்றும் இரை என்றும் அர்த்தம்.

பாவமாகிய தீய செயல்களை ஒழுக்கமற்ற காரியங்கள் அனைத்தையும் உடல் தாங்கிக் கொள்கிறது. முடிந்தால் வீங்கிக் கொள்கிறது. தாங்க இயலாத போது, உடல் காயப்பட்டுப் போகிறது. அப்படி ஆகிய காயம்தான், ஆறாத புண்ணாக, அழியாத நோயாகமாறி, உடலை வேதனைப்படுத்துகிறது. சொல்லாமல், கொள்ளாமல் குற்றுயிராய் அழிக்கிறது.

இப்படி அவதிப்படுவதைத் தான் மரணம் என்றனர். அந்த மரணத்தின் மூலமாக, உடலில் சத்து குறைகிற போது தான், செத்துப் போவது நிகழ்கிறது. சம்பளம்