பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இசைதான். எல்லோருடனும் இதயத்தால் எண்ணத்தால் இசைந்து போவதும் பணிதான்.

இந்தப் பணியை பிணித்துக் கொள்வதுதான் மனித நேயத்தின் மாண்பாகும். பற்று வைப்பதற்கும் பிணி என்றுதான் பெயர். கட்டி வைப்பதற்கும் பணி என்றுதான்.

நாம் ஏன் பிறகு பிணியை நோய் என்கிறோம். பிணிதான் நம்மீது பற்று கொண்டு, தளைபோட்டு, கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

அதிலிருந்து நாம் விடுபடவேண்டும் என்றால் நாம் பணியை பிணித்துக் கொள்ள வேண்டும்.

பணி என்பது ஏதோ ஒரு நாள் செய்து விட்டு மறந்து விடுவதல்ல. ஒதுங்கிப் போவதல்ல. அனுதினமும் ஆர்வத்தோடு, அக்கறையோடு, அன்போடு, ஆத்மார்த்தமாகத் தொடர்ந்து செய்கிற காரியம்தான் பணியாகும்.

தானே தனக்குச் செய்து கொள்கிற பணிக்கு கடமை என்று பெயர். அதையே ஒழுக்கத்துடன் செய்தால் அறம் என்று பெயர். பிறர்க்கு செய்கிற பணியோ தொண்டு ஆகிறது. தியாகம் ஆகிறது. அதுவே திருப்தியான வாழ்வைத் தந்து, நம்மை சுகமெனும் சொர்க்கத்தில் வாழ வைக்கிறது.

பணியைப் பிணித்துக் கொள்வோம். பிணிக்குள் பணியை வைத்து வளர்த்துக் கொள்வோம். நேர் பொருளை பார்ப்போம். எதிர்பொருளை இன்றிலிருந்து மறந்து விடுவோமே!