பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஆகவே, புகழ் பெற புண்ணிய காரியங்களை பண்ணினால் புகலாகிய உடல் புளகாங்சிதம் பெறும். பூரிப்பில் சிறக்கும். புதிய பேரின்பநிலையைத் திறக்கும். வாழ்க்கையின் உண்மை தத்துவத்தை விளக்கும். ஆகவே, புண்ணியராகலாம், திண்ணியராகலாம். எண்ணிய எல்லாவற்றையும் பெறலாம்.

இது நமக்குக் கிடைத்த இனிய வழியல்லவா!


113. கந்தகம்

கந்தகம் என்றதும் ஒரு மருந்து அல்லது ஒரு வகை பாஷாணம் அல்லது கந்தக ரசாயனம் என்றுதான் நமக்கு நினைக்கத் தோன்றுகிறது.

ஆனால் நமது முன்னோர்கள் தேகத்தைப் பற்றி தெளிவானதொரு கொள்கையை தீர்க்கத்தரிசனம் மிகுந்த உண்மையை கந்தகம் என்று மறைமுகமாகக் கூறிச் சென்றிருக்கின்றார்கள்.

கந்து+அகம். அதாவது கட்டுப்பட்ட அது கட்டப்படாத அகம் விந்தகமாகிப் போகிறது. விந்தகம் என்றால் விழுகிற அகம். அதாவது அதன் உயர்ந்த நிலையிலிருந்து உதிர்ந்து விழுகிற அகமாகி விடுகிறது.

ஏன் கந்தகம் வேண்டும் என்கிறார்கள்?

கட்டுப்பட்ட அகம் உள்ளவர்கள்தான் கட்டுப் பாடான வாழ்க்கை வாழ்வார்கள். கட்டுப்பாடுதான் வாழ்க்கைக்கு கைகொடுக்கும் சீலம், காண்பவர்களை வாழ்த்தச் செய்யும் பாலம்.