பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

126 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கொஞ்சம் விவரமுள்ளவர்கள் தருகிற விளக்கம், பொதுவான செயல்களிலிருந்து மதுவான விவகாரமாய் விளங்கும். கல்யாணத்திற்கு ஒப்பிட்டுப் பேசுவார்கள்.

கரணம் என்றால் கல்யாணம், திருமணம் என்று அர்த்தம். மனைவி அமைவதெல்லாம், இறைவன் கொடுத்த வரம் என்றும் பாடுவார்கள்.

ஆக, ஆணுக்கு ஒரு பெண்ணும், பெண்ணுக்கு ஒரு ஆணும் என்ற ஏற்படுகிற இணைப்பைத்தான், கரணம் என்று கூறுகின்றார்கள். அப்படி ஏற்படுகின்ற கல்யாணம் பொருத்தமில்லாது போய், பொருந்தாமல் சிதறிப் போய் விடுகிறபோது, கரணம் சிந்தையை காயப்படுத்திவிடுகிறது.

அதனால்தான், கரணமாகிய கல்யாண விசேஷம், கலக்கத்தைத் தருகிறபோது, அந்தக் கலக்கமும் கஷ்டமும் வாழ்கிற காலம் வரை வந்து கொண்டேயிருக்கும். வளர்ந்து கொண்டேயிருக்கும். சிந்தையும் நொந்து கொண்டேயிருக்கும். வெந்து கொண்டே அழியும். அதைக் குறிக்கவே, கரணம் தப்பினால் மரணம் என்று சிறப்பான விளக்கம் ஒன்றைத் தருவார்கள்.

கரணம் கல்யாணம் என்ற உணர்வுக்கு மேலே நாம் இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்திக்கிறபோது, கரணம் என்ற சொல்லுக்கு கலவி என்று ஒரு பொருள் உண்டு. உடல் உறவு உன்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைத்துச் சொல்ல உதவுகிற வார்த்தைக்குத் தான் கலவி என்று பெயர்.