பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

127


ஆத்திரப்படாமல், அவசரம் கொள்ளாமல், நிதானமாக நடந்து கொள்கிற கலவியில், நிறைவான திருப்தியும், இன்பமும் ஏற்படும். விலங்காக முயல்கிற வெறித்தனத்துடன் கொள்கிற கலவியில், ரணமும் ஏற்படும், மரணமும் ஏற்படும் என்கிற உயிர் தத்துவத்தையும், இந்தப் பழமொழி எடுத்துக் காட்டுகிறது.

கரணம் என்ற சொல் க+ரணம் என்று பிரிகிறது. என்றால் ஆன்மா, உடல், மனம், வியாதி, எமன் என்றும்; காற்று, நீர், தீ என்று பல பொருட்களும்; ரணம் என்றால், இரை, உணவு, புண், போர் என்றும் அர்த்தங்கள் உண்டு.

ஆக, கரணம் என்றால் உடலில், மனதில், ஆன்மாவில் ஏற்படுகிற காயமானது, மரணத்தில் கொண்டு போய் தள்ளி விடுகிறது. அதை மரணம் என்று சொல்லால் குறித்திருப்பதுதான், தமிழ்ச்சொல்லுக்குரிய தனிப் பெருமையைக் காட்டுகிறது.

என்றால் இயமன், நஞ்சு, காலம் என்று அர்த்தம்.

கவனிக்கப்படாமல் விட்டு விடுகிற உடலின் புண், மனதின் காயம், ஆன்மாவின் ரணமானது, ஏற்படுத்துகிற ஆபத்து என்னவென்றால், அது ஆறாத காயத்தை மாறாத ரணத்தை, வேகமாகக் கொல்லுகிற விஷமாக மாற்றி, எமனிடம் கொண்டு போய் சேர்க்கிற ஏற்பாடுகளைச் செய்து விடுகிறது.

இப்பொழுது இந்த முதுமொழியை மீண்டும் படித்துப் பாருங்கள். உடல் காக்காத வாழ்க்கை, உயிர் கொல்லும் விஷ வாழ்க்கை என்று புரிகிறதல்லவா! கரணம் தப்பினால் மரணம்தான்.