பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


128. யோகியா! துரோகியா!

ஒருவரது உடலை வளர்ப்பது உணவுகள் என்றால், உடலைக் கொடுப்பதும் உணவுகள் தான். உடலை வளர்ப்பது உணவு என்றால், உண்+அவு என்று பிரியும் அந்த சொல்லானது, உண் என்றால் ரசித்தும், அவு என்றால் விரும்பியும் உண்ண வேண்டும் என்பதால், உடலை வளர்க்கிறது.

வெறி பிடித்ததைப் போல தின்ன அலைபவர் களுக்கு அந்த உணவே சாப்பாடு ஆக மாறி விடுகிறது. சா என்றால் சாவு என்றும், பாடு என்றால் அவஸ்தை என்றும் பொருள் தருகிறது சாப்பாடு. அதாவது மரண அவஸ்தையை உண்டு பண்ணுவதும் சாப்பாடுதான்.

சாப்பாடு என்றாலே மரண அடி என்று அர்த்தம். மரணத்தின் பிடியிலே மாட்டிக் கொள்ளாமல், மகிழ்வோடு உண்ண வேண்டும் என்பதற்காக, நமது முன்னோர்கள், எப்படி சாப்பிட வேண்டும் என்று தந்திர வழியைத் தந்திருக்கின்றார்கள்.

ஒருவேளை உண்பவன் யோகி
இருவேளை உண்பவன் போகி
மூன்று வேளை உண்பவன் ரோகி

அதற்கும் மேலே பலவேளை உண்பவன் துரோகி. மனதையும் உடலையும் அடக்கி ஆள்கிற யோகி ஒருவேளை உணவு போதும் என்றனர்.

குடும்பத்திலே இருப்பதால் கொஞ்சம் தெம்பு வேண்டாமா! அதற்கு இரண்டு வேளை உணவு போதும் என்றனர் குடும்பவாசி.