பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


உடல் என்பதற்கு பொன் பொருள் என்று அர்த்தம் உண்டு. போற்றப்படுகின்ற பொருளாக பாதுகாக்க வேண்டிய பொன்னாக பராமரிக்கப்பட வேண்டியது நமது உடலாகும்.

நமது உடல் நலமாக, பலமாக இருந்தால், அறம் நடக்கும். இன்பம் கிடைக்கும்.

உடல் உபாதையில் கிடந்தால், அறம் சிரிக்கும் இன்பம் எரிக்கும்.

அந்தக் கருத்தைக் கொண்டு தான், பொருள் என்ற சொல்லை அறத்திற்கும், இன்பத்திற்கும் நடுவே வைத்தனர்.

அறத்தின் வழியே உடலைப் பேணிக் கொள்ளுங்கள்.

இன்பத்தின் வழியே உடலை மேலும் மகிழ்ச்சிப்படுத்துங்கள். உங்களை நோக்கி வீடு வரும். அதாவது சொர்க்கம் வரும். நீங்கள் வாழ்கிற வாழ்க்கையை வைத்தே நரகமா, சொர்க்கமா என்பது புரிந்து விடும். அந்த இரண்டும் ஆகாயத்தில் இல்லை. உங்கள் மனதில், உங்கள் செயலில், உங்கள் வீட்டில், உங்கள் வாழ்க்கையில் கிடைக்கிறது.


5. மருந்தும் மனிதர்களும்

மக்களுக்குப் பிடித்தது விருந்து. பிடிக்காதது மருந்து. விருந்து அளவோடு இருந்தால் விழாதான்.

விருந்து அளவு மீறி விட்டால் விழுந்துபோகிறது சுகம். விரைந்து வருகிறது மருந்து.