பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

141


தானே தான் தனக்குப் பகையாம்! தன் உடம்புதானே தனக்குப் பகையாம். இந்தப் பகையை வெல்வதுதான் பகுத்தறிவும் பட்டறிவும். பட்டறிவும். பயன்படுகிறதா என்ன?


131. சொரிய சொரிய இன்பம்

இந்த வாக்கியத்தை படித்தவுடன் அவரவர் உடல்நிலை மனோ நிலைக்கேற்ப அர்த்தங்கள் ஆர்ப்பரித்துக் கொண்டெழும்.

தோல் வியாதி பிடித்தவன் புண், சிறங்கு, படை கொண்டவனிடம் கேட்டால் ஆக உடல், அரிப்பெடுக் கையில் சொரியும் போது சுகமாய் இருக்கிறது. சும்மா சொல்லக் கூடாது அது ஒரு இன்பமான இன்பம் என்று அனுபவித்துப் பேசுகிறான்.

இயற்கையை அதன் கூறுகளாகிய பஞ்சபூதங்களை வியந்து நோக்கி இரசிக்கின்ற கவிஞன் கலைஞன் போன்றவர்கள் பனிமழையோ, கொட்டும் மழையோ இவற்றை பார்க்கும்போது சொறிய சொறிய இன்பமான காட்சி இதுதான் தேவலோக ஆட்சி என்று சொல்லி சொல்லி பாராட்டுகிறார். இங்கே சொறிதல் என்றால் பொழிதல் என்று அர்த்தம்.

மற்றவர்களின் துயர் முகம் பார்த்து அவர்கள் அகம் குளிர அவசியமான பொருள்களை வாரி வாரி வழங்குகின்ற வள்ளல் சொல்கிறான் சொரிய சொரிய இன்பமாக இருக்கின்றது என்று இங்கே சொரிதல் என்றால் மிக நீட்டுதல் என்று அர்த்தம். நீட்டுதல் என்றால் பெருங்கொடை என்று அர்த்தம். கொடை