பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

143


இதற்குள்ளே இன்னொரு பொருளும் ஒளிந்து கொண்டிருக்கிறது. உப்பு இடுபவரைப் போல தப்பு செய்பவரும் இருக்கிறார்கள் அல்லவா! உப்பை இடுபவரை நினைக்கிறது போல தப்பை செய்கிறவரை நினைக்காமல் ஒதுக்கிவிடு மறந்து விடு என்பதையும் குறிக்கிறது.

இந்த உப்பு என்ற சொல் தப்பிதமாக பயன்படுத்தினாலும் கேட்கும்போது இனிமையாக இருக்கிறது. அதுதான் இந்த உடம்பின் பெருமை.


133. காற்றுக் கொள் - காத்துக் கொள்

ஆற்றுக்குப் போகிறேன் என்று சொல்பவர் ஆத்துக்குப் போகிறேன் என்று சொல்கிறார்கள். வயலின் நாற்றைப் பிடுங்கு என்று சொல்வதற்கு நாத்தைப் பிடுங்கு என்று சொல்கிறார்கள்.

சோற்றை சாப்பிடு என்று சொல்வதற்கு சோத்தை சாப்பிடு என்று சொல்கிறார்கள். உலக வாழ்க்கைக்கு உடல் எல்லா காரியங்களையும் செய்கிறது. அந்த காரியங்களை இன்ன முறையில்தான் செய்ய வேண்டும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு வழிப்படுத்துகிறது மூளை. அந்த மூளையைத் தான் மனம் என்கிறோம்; அகம் என்கிறோம்; சிந்தை என்கிறோம்; முன்னம் என்கிறோம்; உள்ளம் என்கிறோம்.

மேற்கூறிய இந்த இரண்டையும் திறம்பட செயல்படச் செய்ய ஆற்றுப்படுத்துகிற இந்த உயிருக்கு ஆற்றுமா என்று பெயர். ஆற்றுமாவைத்தான் முன்னே