பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்பது சிந்தனைகள்

145


135. துன்பம்

நேற்றைய துன்பங்களையே நினைத்துக் கொண்டிருப்பவன் நீசனாகி விடுகிறான்.

இன்றைய துன்பங்களை எதிர்த்துப் போராடி செல்கிறவன் தீரனாகிறான்.

வெல்கிறவன் வீரனாகிறான்.

நாளைய துன்பங்களை எதிர்பார்த்து வராது தடுப்பதில் ஈடுபடுகிறவன், தயாராகிக் கொள்கிறவன் விவேகனாகிறான்.

ஆனால் இன்று பலர் நீசர்களிலும் மோசர்களாகவே தினமும் வாழ்கின்றார்கள். வீழ்கின்றார்கள்.

இவர்களெல்லாம் கரையேறிவிட மாட்டார்களா என்கிற கவலையே நமக்கு.


136. காதல்
காதலிக்கத் தொடங்குகிறவன்
கலங்கிப் போகிறான்
காதலுக்குள் முடங்குகிறவன்
புழுங்கி வேகிறான்
காதலுக்குள் ஓடுங்குகிறவன்
புலம்பிச் சாகிறான்.
காதலிக்கிறவர்களை விட்டு விடுங்கள்.
கெட்டுத் தொலையட்டும்
தாமாகவே கெட்டுப் போகிறவர்களை மற்றவர்கள்
ஏன் முட்டவேண்டும். முடக்க வேண்டும்.