பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


137. ஆசை

ஆசையை அடக்க முடியாமல்
அதிகமாக நீட்டிவிடுகிறவன் அவதிக் குழியாகிறான்
ஆசையை வளர்த்துக் கொண்டு அசதியாய் வாழ்கிறவன்
சகதிக் குழியாகிறான். சக்தியை இழக்கிறான்
ஆசையை மழிக்க முடிந்தவன் ஆனந்தனாகிறான்.
ஆசையுள் அமுங்கிப் போகிறவன் கேணயன் ஆகிறான்.
ஆகவே, ஆசையை மழிக்கவும் வேண்டாம். நீட்டவும் வேண்டாம்.


138. குருவும் ஆண்டவனும்
ஆழமும் அகலமும் குறைந்தது ஆறு
கரை தெரியாத அகலமும். கலங்கச் செய்யாத
ஆழமும் கொண்டது கடல்.
அச்சுறுத்தவும், அலைகளும் சுழிகளும் கொண்டது ஆழி
ஒவ்வொன்றிலும் நீந்திச் செல்வது
நிறைவான கலையாகும்.
இந்த வெற்றிகரமான நீச்சல் கலையை
அருகிலிருந்து கற்றுத் தருபவன் குரு.
அருவமாகி இருந்தபடியே ஆற்றலைக்
கொடுப்பவன் ஆண்டவன்
நல்ல குருவைத் தேடிப்பிடி.
நம்பும் ஆண்டவனிடம் சக்தியைக் கேள்.
நீந்துவதும் எளிது
நிம்மதியோ வரவு.