பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

149


143. அறிஞன்

அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளதுடன் முயற்சிப்பவனுக்கு அறியும் பண்புகள் அதிகமாகிறது. அறிவு அதிகம் ஆவதாலே அவன் நெறியும் நீர்மை பெறுகிறது. அதனால் அவன் அறிஞன் ஆகிறான்.

அறிந்து கொள்வதில் கூட ஆர்வம் இல்லாமல் சாப்பிடுவது, சாணம் போடுவது. முடியும் வரை அலைவது, முடியாவிட்டால் தூங்குவது என்று வாழ்கிறவன் அசடன் ஆகிறான்.

எனக்கு எல்லாம் முடியும். என்னிடம் இல்லாதது எதுவுமில்லை என்று இருமாப்பு கொள்கிறவன் இயற்கையை எதிர்த்து சில்லறைத்தனமான செயற்கை லீலைகளில் சின்னாபின்னமாகி விடுகிறான்.

அவனை அழிப்பதற்கு வேறு யாருமே வேண்டாம். அவனே அவனை அழித்துக் கொள்வதால் அழிஞன் என்றே அழைக்கப்படுகிறான்.


144. சித்தம்

சிந்தனைகளில் தெளிவு இருப்பவரை சித்தர் என்கிறோம். சிந்தனைகளில் புதுமைப் பொலிவு நிறைகிறபோது புத்தர் என்கிறோம். சிந்தனைகளில் சிதறுண்டு, குழம்பிப் போய் பக்கத்தில் உள்ளவர்களை யும் குழப்புபவர்களை நாம் பித்தர் என்கிறோம். இது அவசியமா?

சித்தம் சுத்தமாக அமைய வேண்டும். அதனால் நம்மை சித்தராக, புத்தராக மாற்ற இயலாவிட்டாலும்,