பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

151


பணிந்து வணங்கியது ஒரு பக்தி முறை. இதற்கு அரு உருவ வழிபாடு என்று பெயர். (உ-ம்) சிவலிங்கம், சிலுவைச் சின்னம்.

3. கடவுள் எங்கும் பரந்திருக்கிறார் என்று பரந்த வெளியில் பார்த்து கனிந்து உருகி கசிந்து கண்ணீர் மல்கிப் பணிந்து வணங்கும் ஒரு பக்தி முறை. இதற்கு அருவ வழிபாடு என்று பெயர்.

இந்த மூன்றாவது பக்திதான் சிந்தை தெளிந்தவர்களுக்கு மட்டுமே முடியும். வீதிக்கு வீதி கோயில் வருகிறது என்றால் இன்னும் நாம் முதல் கட்டத்தையே தாண்டவில்லை என்றுதான் அர்த்தம்.


147. தத்துவம்

இந்த உலகத்தின் தன்மையை உண்மையை அறிந்தால்தான் உயர்ந்த வாழ்வு வாழ முடியும். எப்படி அறிவது?

1. உலகப் பொருள்களின் அதனதன் தன்மையை அப்படியே அறிந்து கொள்வதற்குத் தத்துவம் என்று பெயர்.

(தத் = அதனதன்; துவம் = தன்மை, இதனால்தான் தனித்தன்மை என்ற சொல்லும் பிறந்தது.

2. உலகப் பொருள்களின் சிறந்த தன்மையைத் தெரிந்து கொள்வதற்குப் பெயர் சத்துவம்.

சத் = சிறந்த துவம் = தன்மை. சிறந்த தன்மையை அறிவதால். செய்யும் பணியில் செழுமை கிடைக்கிறது.