பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


150. தேகலோகமும் தேவலோகமும்

தெரியாத பேர்களுக்கு தேவர்கள் என்று பெயர். தெரியாத தேவர்கள் வசிக்கும் இடம் தேவலோகம். தேவலோகத்தில் தேவர்கள் உண்பது தேவாமிர்தம். இந்த மூன்றும் இதிகாசங்களில் இடம் பெறாத இடமேயில்லை. அதை கற்பனையில் ஏன் சுவைக்க வேண்டும்? சுகிக்க வேண்டும். இந்த மூன்றும் கிடைக்காதவைகளா என்ன? இதோ! உங்களிடத்தில், உங்கள் ஊரில், உங்களிடமே கிடைக்கின்றனவே! உடலிலும் மனதிலும் உணர்விலும் உயர்ந்தவர்களைத் தான் தேவர்கள் என்பார்கள். தே+அர். பிறர் மதிக்கிற தெய்வம் போன்றவர்கள். நீங்களும் தேவர் ஆகலாம். தெய்வம் ஆகலாம். நீங்கள் வாழ்கிற இடம் தேவலோகம்தான். அமுதம் என்றால் உள்ளும் புறமும். உவகை என்று அர்த்தம். சந்தோஷமாக்குவது தேக லோகம். சந்தோஷமான இடம் சொர்க்க லோகம். இதுதான் தேவலோகம். இவையெல்லாம் இல்லையென்றால் அப்படிப் பட்ட மனிதர்கள் வாழ்வது பாவலோகம் தானே!


151. மாபெரும் கலை

தானே தனக்குள் சந்தோஷப்பட்டுக் கொள்வது தன்னம்பிக்கையும், தளராத ஊக்கமும் கொள்வது மகா பெரிய விஷயமாகும்.

தன்னிடம் நிறைந்துள்ள சந்தோஷம் போலவே, மற்றவர்களும் பெறுவதற்காக முயற்சிப்பதும், கை