பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வாழ்க்கையில் ஊக்கம் பெருகும். முயற்சிகளில் ஆக்கம் நிறையும்.

ஊக்கத்தின் தாக்கமே, வாழ்க்கையின் சொர்க்கம், ஊக்கம் அழிப்பவர் வாழ்வில் தேக்கம் நிரம்பும், சோம்பல் சிரங்காக மாறி நமைக்கும். எல்லாமே கசக்கும்.

தினம் என்பது இறைவன் தந்த இன்றைய போனஸ். அதை அனுபவித்து. ஆனந்தமாக வாழ்வது நமது கடமை என்று நாம் நினைக்கிறபோதே ஆக்கம் பெருகும்.


7. பலஹீனம் போக்கும் வழி

பிறரது தவறினைப் பொறுப்பதும். மன்னிப்பதும் உரம் வாய்ந்த உடல் உள்ளவர்களால்தான் முடியும். ஏனெனில் உரம் வாய்ந்த உடலில்தான் உரம் வாய்ந்த மனம் இருக்கிறது. பலஹீனம் பிறரது தவறைக் கண்டு பதட்டப்படும். பொங்கியெழும், பதிலுக்குப் பதில் செய்யத் துடிக்கும். ஆகவே பலஹீனத்தை ஒழிக்க விளையாட வாருங்கள்.


8. அறிஞனும் பயில்வானும்

உடம்பை செழுமையாக வைத்திருக்க, முழுமையாகப் பயன்படுத்த, அறிவு மட்டும் போதாது. பயிற்சியும் வேண்டும். எழுச்சியும் வேண்டும். முயற்சியும் வேண்டும்.

ஒருமுறை கற்றல், வேலையைச் செய்து முடித்து விடுவதற்குப் படித்தல் என்று பெயர். முயற்சியுடன் தொடர்ந்து முனை மழுங்காது தினமும் கற்பதற்குப் பெயர் பயிலுதல் என்பதாகும். தினமும் பயில்பவனைத்-