பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


156. இனிமையும் தனிமையும்

இனிமைப்படுத்தாத சூழ்நிலைகள்தான், ஒரு வனைத் தனிமைப்படுத்தி விடுகின்றன.

கணிவைக் கொடுக்காத சூழ்நிலைகள் தான் ஒருவனுக்குத் துணிவைக் கொடுக்கின்றன.


157. மூன்று வகை மனிதர்கள்

ஆறறிவு கொண்டு வாழ்கிற ஜீவிகளை மனிதர்கள் என்பார்கள். மனசு மட்டும் இருந்து மற்ற பண்புகள் குறைந்து காணப்படுகிறபோது அவர்களை, மனுஷர்கள் என்பார்கள்.

மனுஷர்கள் ஆனாலும் மனிதர்கள் ஆனாலும், அவர்கள் வாழ்ந்தாகத்தானே வேண்டும் வா+ வாழ் + வாகை + கை என்பது வாழ்க்கை.

பிறர் புகழ வெற்றிகரமாக வாழ வேண்டும். வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஒழுக்கம் (கை) தேவை. அது உடல் ஒழுக்கம், மன ஒழுக்கம்.

1. ஒழுக்கத்தால் உயர்ந்து, திறமையில் மிளிர்ந்து, பிறர் மகிழ வாழ்பவர்கள் பேசப்படுகிற மனிதர்கள் ஆவார்கள். அவர்கள் எந்நாளும் மக்கள் இதயங்களிலே அமர்ந்திருக்கும் அமரர்கள்.

2. ஏதோ அதிர்ஷட வசத்தால் உயர்ந்து, மக்கள் போற்ற வாழ்பவர்கள், சில நாட்களுக்குள். தங்கள் ஒரிஜினல் குணத்தைக் காண்பிக்கத் தொடங்கிவிடுவார்கள். பொறுக்க முடியாத போது மக்கள் பலர் ஏசுவார்கள். சிலர் பேசுவார்கள். இப்படி பேச்சுக்கும் ஏச்சுக்கும்