பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஏனென்றால் தமிழின் தனித்தன்மை அத்தகையது. தமிழர் என்னும் சொல் ஒரு தனிப்பட்ட மனித சமுதாயத்தைக் குறிப்பதாக வெளியளவில் தோன்றினா லும் உண்மையான பொருள் உண்மையிலேயே உயிரூட்டமுள்ள உணர்வுகளோடு ஒன்றிய ஒரு தன்மையாகவே விளங்குகிறது.

தமிழ்+அர் என்பதுதான் தமிழர் என்னும் சொல் ஆயிற்று. அதற்குத் தமிழுடன் பொருந்தியவர்கள் என்பது பொருள். தமிழ்பேசுகிறயாருமே தமிழைப்போல தனித் தன்மையாளராகவும், ஒப்பின்மையாளராகவும், ஏகமாக ஒரே ஒருவர்தான், இவர்போல் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிலும், பிறரது ஆதரவோ, ஆதாரமோ இல்லாமல் தனித்தியங்கி வென்று நிற்பவர்தாம் தமிழர், இந்த அரிய குணத்தை மிக அழகாகப் பாடிச் சென்றார் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் அவர்கள்.

‘தமிழனென்றோரு இனமுண்டு
தனியே அவர்கொரு குணமுண்டு’

அந்தத் தனியான குணம் என்ன வென்றால், கனியாகச் சொல்லுதல், பணிவாகச் செல்லுதல், துணிவாகப் பொருது வெவ்வுதல் போன்றவையாகும். அப்படிப்பட்ட இனிய குணங்களே தமிழர் வாழ்க்கையாக வடிவெடுத்தது. பண்பாடாகப் பரிணமித்தது. உயிர் நிலையாக உருவெடுத்தது.