பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

15


கிறார்களே பயில்பவன் என்றனர். அதுவே பயில்வானாக மாறியது.

தினமும் பயிற்சி செய்பவன் தேறிவருவதால் அவனைப் பயில்வான் என்றனர். இந்த வார்த்தைக்கு வேறு பொருள் வந்து விட்டது. தினமும் பயில்பவனை பயில்வான் எனச் சொன்னால் பொருந்தாது என்று புத்தியுள்ளவர்களே மறுக்கின்றனர். என்றும் அறிவைப் பயில்பவன் அறிஞன் ஆகிறான். பலத்தைப் பயில்பவன் பயில்வான் ஆகிறான்.

பயில்வது என்பது மனிதர்க்குப் பொறுப்போடு சிறப்பும் ஆகிறது.


9. உயிரோடு மரணம்

உடம்பு என்பது குழந்தையைப் போல. கற்றுத் தரத்தர குழந்தை ஆர்வத்துடன் பெற்றுக் கொள்வது போல, உடம்பும் உவப்போடு போற்றி ஏற்றுக் கொள்கிறது. போற்றி மகிழ்வது போல உடம்புக்கு நல்ல பழக்கங்களைத் தருகிறபோது, உடலுக்கு விவேகம் மட்டுமல்ல வேகமும் கூடும். அந்த வேகத்திற்குத் தொடர்ந்த முயற்சியும் துணிவான எழுச்சியும் தேவைப்படுகிறது.

இதைத்தான் இரண்டு, இரண்டு வார்த்தைகளில் எடுப்பாக கூறிச் சென்றனர் நமது முன்னோர்கள்.

வேகம் ஓட ஓட என்றனர். ராகம் பாடப் பாட என்றனர். யோகம் தேடத் தேட என்றனர். போகம் கூடக் கூட என்றனர்.