பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஆனால் உடலுக்குக் கேடு பயக்கும் காரியங்களைச் செய்தால் கெடுதியே நிறைய வரும். நோயைத் தரும் என்றனர்.

அதனால் மூட மூட ரோகம் என்றனர். வாட வாட சோகம் என்றனர். துரோகம் செய்வதற்கு தண்டனை என்ன தெரியுமா? உயிரோடு மரணம்.


10. பதவி

ஆட்கள் எல்லாம் இன்று அதிகாரம் செய்யத்தான் அலைகிறார்கள். பதராய் பறக்கிறார்கள்.

அதிகாரம் என்றால் அதிகக் காரம் என்றுதானே அர்த்தம். அதிகக் காரம் உடம்புக்கு மட்டுமல்ல. வாழ்வுக்கும் ஆகாது.

அதிகாரத்தை அளிப்பது எது? பதவி.

பதவி என்றால் எவ்வளவு பயங்கரமான அர்த்தம் இருக்கிறது பாருங்கள். ப+தவி தான் பதவி

தவி என்றால் உங்களுக்குத் தெரியுமே! தவிப்பு. வருத்தம். ப என்றால் பெருங்காற்று என்றும் சாபம் என்றும் அர்த்தம்.

பதவி என்றால் சாபத்தால் சபிக்கப்பட்டு அனுபவிக்கிற துன்பம் என்று அர்த்தம்.

பதவி பெறுவதற்காக, பதவியில் இருக்கிறபோது பதவிபோன பிறகு படுகிற பாடுகள் எவ்வளவு?

பெருங்காற்றில் பாழான பயிர்கள் போல, அதிகாரத்திற்கு அலைந்தவர்கள் அழிகிறார்கள்!