பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

23


பார்வையால் முறைப்பது. பயங்கரமாய் பேசிக் குலைப்பது. பாய்ந்து விழுந்து கடிப்பது - பரிதாபமாய் உதைபடுவது - நாய் மனம், கனவுகளில் பறப்பது - கண்டதையும் அடையத் துடிப்பது பேய் மனம் தான் பசித்தும் பிறர் பசியைப் போக்குவது தாய் மனம்.


21. உழைப்பால் வருவது

உடலை வருத்தி உழைத்தால்
பொருளால் விருத்தி
புகழால் கீர்த்தி
மனத்தால் திருப்தி
மார்க்கத்தில்
மறைந்து போகும் விரக்தி


22. சுகம் உயரும்

நலம் உயர பலம் உயரும்
பலம் உயர உளம் உயரும்
உளம் உயர வளம் உயரும்
வளம் உயர குலம் உயரும்
குலம் உயர மனம் மகிழும்
மனம் மகிழ குணம் உயரும்
குணம் உயர தனம் உயரும்
தனம் உயர தினம் திகழும்.
சுகம் உயரும் சொர்க்க மாகவே!


23. எப்படி வாழ்கிறோம்

நாம் எப்படி வாழ்கிறோம்?
எப்படியோ? எப்படியோ வாழ்கிறோம்!