பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நமக்குள்ளே நூறு வித நோய்கள்....
நம்மைச் சுற்றி நடமாடும் மனித ஓநாய்கள்
நம்மைப் பயமுறுத்தி பாடாய் படுத்திக் குலைக்கின்ற உறவு நாய்கள்.
மனக் குரங்கின் சேய்கள்!
மனதைப் பித்தாக்கி ஆட்டுவிக்கும் பேராசைப் பேய்கள்
இவற்றுக்கிடையேதான் வாழ்கிறோம்.
மகிழ்ச்சியாய் இருப்பது போல் நடிப்பு
மர்மமாய் தொடர்கிற மரணப் பிடிப்பு
இருந்தாலும் நாம் நித்திய ஜீவன்; நிலைத்து வாழ்வோம் என்கிற நினைப்பு.
இப்படியே பல ஆசைத்துடிப்பு
இப்படித்தான் வாழ்கிறோம்... சூடேறிய இரும்பு - அடி வாங்குவது போல! அடிகள் விழுவது ஆயிரம்! துடிப்பதும் பாயிரம்
அதனால் தான் வடிவத்தில் கேவலம்!


24. இல்லானும் இல்லாளும்

இல்லான் என்றால் இல்லாதவன் என்றே பொருள் சொல்கிறார்கள். இல்லான் என்றால் இல்லாளுக்கு ஆண்பால் என்பர். ஆன் என்றால் பார்ப்பான் (he will see) என்ற பொருள். இல்லத்தைப் பார்ப்பவன், காப்பவன் என்பது உண்மையான பொருள். அப்படியானால் இல்லாள் என்பதற்கு என்ன அர்த்தம்? பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டைப்பார்த்துக் கொள்ள ஒரு ஆள் தேவைப்படுகிறது என்பதால் இல் + ஆள்