பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வாய்தான் வழியை மறிக்கிறது. வாழ்வை
மறைக்கிறது.
வாய்தான் உண்ண வைத்து வதைக்கிறது
வாய்தான் சொல்ல வைத்து வாட்டுகிறது
அதனால்தான் மனிதனின் வாய்படும்பாடு
நாய்படும் பாடாகிறது
அதனால்தான் வாயடக்கம் வேண்டும் என்கிறோம்.
அதுவே நோய் தடுக்க உதவும்
நோகாமல் வாழவும் உதவும்.


27. வாய்ப்பும் வாழ்வும்

மனிதர்கள் எல்லோருக்கும் வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. கரையை நோக்கி வரும் அலை நீர் போல, மனிதரை நோக்கி வாய்ப்புகள் வருகின்றன.

வாய்ப்பினைப் பயன்படுத்த முடியாதவன் போதிக்கிறான்

வாய்ப்பினை பயன்படுத்த இயலாதவன் வாதிக்கிறான்.

வாய்ப்பினைப் பயன்படுத்த முனைந்தவன் சாதிக்கிறான்

வாய்ப்பைக் கண்டும் காணாது ஒதுங்குபவன் பேதிக்கிறான். இறைவன் சோதிக்கிறான் என்று சொல்லிக் கொண்டு - காலாவதி ஆகிறான்.