பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஆசைகளின் ஆட்டம் அலைக்கழிப்பில் தான் முடிகிறது. அந்த அக்னித்தனமான ஆசைகளுக்கு இரையாகாமல், உறையாகாமல் இருப்பதும் சிறப்பதும் கஷ்டம்தான். ஆசைகளுக்கு இரை ஆகாதவர்கள் தான் இறை ஆகிறார்கள். இறை ஆகிறவரே இறைவனாகவும் ஆகிறார்.


30. பக்தி பலவிதம்

உயர்ந்த ஒன்றின் மேல் உடலும் உள்ளமும் ஒன்றிப் போய் நிற்பதற்கு பக்தி என்று பெயர். பிரமம் ஆகத் தன்னை எண்ணி கிரமமாகக் கடமைகளை ஆற்றி பெருமையாக வாழ்கிற பக்தி சுய பக்தி.

தன்னை அறிய இயலாமல் தயங்கி தான் யாரென்று அறியாமல் மயங்கி, புழுங்கி, தள்ளாடும் போது கை கொடுப்பது பய பக்தி.

அறிவிருந்தாலும் அங்கு சுய பக்தி இல்லை. தெளிவு கொள்ளாமல் நம்பிக்கையிருந்தாலும் பய பக்தி இல்லை. இரண்டு பக்திக்கும் இடையில் குழப்பத்துடன் அல்லாடுவதுதான் குய பக்தி.

பயபக்தி பாழாகி, சுய பக்தி திவாலாகி, குழப்பத்தைக் கூட்டுகிற குய பக்தியே இன்று மனித உள்ளத்தில் கூத்தாடிக் கொண்டிருக்கிறது.


31. பரவசமான இலவசம்

இலவசமாக எது கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ள பரவசமாகத்தான் இருக்கிறது. இந்த நாட்டில் ஒரு சாபக்கேடு உண்டு.