பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

29


இலவசமாகத் தருபவருக்கும் மதிப்பில்லை. இலவசமாகப் பெறுபவருக்கும் மரியாதை இல்லை.

இலவசமாகத் தரப்படும் பொருளுக்கும் மகத்துவம் இல்லை. உழைக்கிறபோது பெறுகிற பொருள் சிறியதாக இருந்தாலும் அதில் திருப்தி உண்டு. மகிழ்ச்சி உண்டு. மனம் உண்டு.

மனத்தைச் சாகடிக்கிற காரியங்களில் தான் மனிதருக்கும் ஆசை, ஆள்பவருக்கும் ஆசை.


32. ரோகிகளும் துரோகிகளும்

ஒரு நல்ல காரியம் செய்கிறவருக்கு உதவி செய்யுங்கள் என்றால் உபத்திரவம் செய்கிறவர்கள்தான் அதிகம். எப்படி?

முக்கிக் கொண்டு அறிவுரை தருவார்கள்.

முனகிக் கொண்டு குறைகள் சொல்வார்கள்.

உதட்டைப் பிதுக்கிக் கொண்டு பழித்துக் காட்டுவார்கள். மனதில் சபித்துக் கொண்டு வாழ்த்துரை கூறுவார்கள். இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள்.

ரோகிகள் = உடல் நோயாளிகள்
துரோகிகள் = கெடுக்கின்ற மனநோயாளிகள்
ரோதிகள் = தொந்தரவு தருபவர்கள்
விரோதிகள் = புத்திசாலித்தனமான போக்கிரிகள்
குரோதிகள் = இருட்டு புத்தியுள்ள திருட்டாளர்கள்.

இவர்கள் மத்தியில்தான் நல்லதைச் செய்ய முயல்கிறோம். இத்தனை முட்டுக்கட்டைகளிலும்