பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அதனால்தான் உதடு சொல்லி விட்டு உள்ளே இருக்கிறது. முதுகுதான் வாங்கிக் கட்டிக் கொள்கிறது என்று ஒரு பழமொழியும் பிறந்திருக்கிறது.


45. சொந்த இடம்

இந்த உலகம் - நாம் வந்த இடம், உறங்கவும் ஓய்வெடுக்கவும் கூடிய ஓரிடம். அந்த நேரத்திற்குச் சொந்த இடம்.

ஆனால் மனிதர்களுக்கெல்லாம் பார்த்த இடம் எல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று துடிப்பு. பதைபதைப்பு.

ஆனால் அவரவர்க்கு என்று தேவைப்படும் ஆறடி இடம் கூட தரமானதும் அல்ல நிரந்தரமானதும் அல்ல.

செத்தவுடன், கண்ட இடத்தில் தூக்கி எறிந்துவிட்டு வந்து துக்கத்தை சிந்தி விட்டுப் போனகாலம் உண்டு. அடையாளம் தெரிவதற்காக தலைமேலே கிடத்தி விட்டு சுற்றிலும் கற்களை வைத்து விட்டு போன காலம் உண்டு. ஆழ்ந்த அன்பினால் கழுகும், பறவைகளும், மிருகங்களும் குதறிவிடாமல் மண்ணில் புதைக்கும் காலம் வந்தது. செப்பமாக வெட்டி எடுத்துப் புதைத்த இடம் புதைகுழி. அதை அழகாக வடிவமைத்த இடம் கல்லறை. சுட்டு எரித்து சாம்பலாக்கிய இடம் சுடுகாடு.

இதில் யாருக்கு எந்த இடம் - சொந்த இடம் எப்படி தெரியும். எப்போது தெரியும்?