பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


விருப்பத்தை நிரப்ப இலட்சியமாகக் கொள்கிறவன் சிந்தைக்கு சிறப்பு சேர்க்கிறான்.

சிந்தையைப் புரிந்தவர்கள் வித்தர்கள். (வித்து = அறிவு) சிந்தையில் தெளிந்தவர்கள் சித்தர்கள். (சித்து=தெளிந்த அறிவு).


47. மாதர்களும் சேதர்களும்

நிமிர்ந்து நிற்கிற வரையில்
துணிந்து நிற்கிற வரையில்
அதிகாரத்திற்கும் ஆணவத்திற்கும் ஆசைக்கும்
தணிந்து போகாத வரையில்
பணிந்து போகாத வரையில்
மாதர்கள் மாதர்களாக இருக்கிறார்கள்
மல்லாந்து விடுகிறபோது
அவர்கள்
சேதர்கள் ஆகி விடுகிறார்கள்
சூதர்கள் கைப்பட்டு சேதர்கள் ஆவது என்பது மந்தியின் கைப்பட்ட மாலையின் நிலைதான்!


48. பொய்மையின் வெற்றி

பொய்யைப் போற்றி வளர்க்கிற பொறுப்புள்ள படிப்பாளிகளுக்குப் பெயர்தான் வக்கீல்கள்!

அறிவு அதர்மத்திற்கு ஆலவட்டம் போடுகிறது. அநியாயங்கள் குறைய வழியே இல்லையே!

அதர்மத்தைக் காக்கும் ஆயிரம் அறிவாளிகளைவிட, அறிவில்லாத மடையர்களே ஒரு நாட்டுக்குப் போதும்.