பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


75. வாசி

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாசி, வாசி என்றே வற்புறுத்துகின்றனர். புத்தகத்தை வாசி புத்தி வரும் என்பதற்காகவே அவர்கள் குழந்தைகளுடன் தினந்தோறும் போராட்டமே நடத்துகின்றனர்.

புத்தி வருவதற்காக மட்டுமா படிக்கிறார்கள்? பிற்காலத்தில் பெரிய படிப்பு பெரிய பதவி! பெரிய வாழ்க்கை! என்ற பிடிப்புக்களுக்காகத்தான்.

எல்லாம் சரிதான். எண்ணியது எல்லாமே நடந்து விட்டால், கேட்டது எல்லாமே கிடைத்து விட்டால்? சந்தோஷம்தான். அந்த சந்தோஷமான மனதுடன் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டாமா?

உலக வாழ்க்கையை அனுபவிக்க உடல் அவசியம் அல்லவா? உடலை உதாசீனப்படுத்தி விட்டு எப்படி சுகமாக வாழ்ந்திட முடியும்.

சுகமான வாழ்க்கைக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வாசி வாசி என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வதில்லை ஏன்? அவர்களுக்குப் புரியாத தன்மைதான். புத்தகத்தை வாசி என்பது போலவே சுத்தமுடன் வாசி என்பது மிகவும் முக்கியம்.

வாசி என்றால் படி என்று அர்த்தம். அதுபோலவே வாசி என்றால் காற்று என்று அர்த்தம். அந்தக் காற்றை வாசி என்றால் எப்படி? சுவாசி என்று அர்த்தம்.

சு என்றால் நன்மை, சுகம் என்பது அர்த்தம். சுகமான நன்மையும், நன்மையான சுகமும் கிடைக்க