பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

67


இது சாதாரண மக்களுக்குப் போதுமான விளக்கம். இதையே மதத்திற்குள் நுழைத்து மயக்கத்தில் ஆழ்த்துகிற விளக்கத்தைக் காணுங்கள்.

அம் என்று இழுப்பதற்கும், சம் என்று விடுவதற்கும் உரிய செயலுக்கு அஜபா மந்திரம் என்று பெயர்.

சா+சுகம் என்பது வடமொழி. He - என்றால் அவன். அதாவது ஆண்டவன். Aham = என்றால் நான். அதாவது சுவாசிப்பவன்.

மூச்சை உள்ளே இழுக்கும் போது அந்த ஆண்டவனுடன் நான் தொடர்புகொண்டிருக்கிறேன். I am He = என்னுடன் அவன் தொடர்கிறான். அதாவது Hamsa என்பது.

சுவாசிக்கும் ஒவ்வொரு முறையும் இறைவனுடன் தொடர்பு நீடிக்கிறது என்று எண்ணிய படியே சுவாசிப்பதுதான் அஜபா மந்திரம். இப்படி சுகமான சுவாசத்திற்கே, அம்சம் என்று பெயர்.


78. ஆடை கட்டி வரும் ஆசைகள்

ஆசு என்றால் விரைவு என்று அர்த்தம். நினைத்தவுடன் விரைவாகக் கவி பாடுகிற ஒருவனை ‘ஆசு கவி’ என்பார்கள்.

ஆசு என்றால் குற்றம் என்று ஓர் அர்த்தம். குற்றத்திலே அதிக அகலமும், ஆழமும், உயரமும், உத்வேகமும் நிறைந்ததற்குப் பெயர்தான் ஆசை.

நினைத்த மாத்திரத்தில் ஓடுகின்ற வேகமும், துன்பத்தைத் தருகின்ற திட்பமும், நுட்பமும் கொண்டதுதான் ஆசை.