பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஆடவர் என்ற அழகான சொல் ஒன்று கழிவறை கட்டட முகப்பில் நாற்றச் சொல்லாய் போய்விட்டது.

அந்த அழகான ஆடவர் என்ற ஆண் பால் சொல்லுக்கு, பெண்பால் சொல் எது என்றால் மிகவும் ஆச்சரியமான சொல்லாக அது இருக்கிறது.

வெற்றியாளராகத் திகழும் மனிதனுக்கு உள்ள எதிர்பால் சொல் ஆடவை என்பதாகும்.

ஆடவை என்பது வெற்றி வீராங்கனை என்று அர்த்தம். ஆற்றல் மிகுந்த ஆடவர்களை ஆடிவைத்து, வைத்து, பாடுபடுத்தும் கூர்மை கொண்டிருப்பதால்தான் பெண்களை ஆடவை என்றார்கள் போலும்.

ஆண்களோடு சம உரிமை வேண்டும் என்று இந்த காலத்தில் போராடும் பெண்களுக்கு, அந்தக் காலத்திலேயே சம உரிமை அல்ல. ஆட்டிப் படைக்கும் உரிமையை தந்திருக்கின்றார்களே நம் மூதாதையர்.

மனைவிக்கு அஞ்சி வந்த உரிமை என்று தொல் காப்பியம் கூறுகிறது. அஞ்சி வந்த உரிமை, கெஞ்சி வந்த உரிமையாகி, பிறகு கொஞ்சி வந்த உரிமையாகி, இன்று மிஞ்சி வந்த உரிமையாகிப் போயிருக்கிறது.

ஆடவரும் தோற்பார்? எங்கே? ஆடவையிடம் தான்.