பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

77


சிந்திப்பவனாக, அழகனாக, நிதமும் அப்படியே இருப்பவனாக மன்மதனாக, உறவினனாக, தீமைக்குப் பகைவனாக விளங்குபவனே மனிதன் என்று அழைக்கப்பட்டான்.

நல்லதைத் திரும்பத் திரும்ப நினைப்பதையும் சொல்வதையும் தான் மந்திரம் என்றனர். (மன்-திறம்). திரம் என்றால் திரும்பத் திரும்ப. நல்லதை திரும்பத் திரும்பச் சொல்வதுதான் மந்திரம்.

ஆக, மனுஷனாக மட்டும் இருந்து விடாமல், மனிதனாகவும் வாழ்வதுதான் பிறவி எடுத்த பேறாகும்.


88. வாத்தியார் - ஆசிரியர் - குரு

பிறந்தது முதல் இறப்பது வரை ஒவ்வொரு நொடியிலும் ஒரு மனிதனுக்கு ஏற்படுவது அனுபவம். அனுபவம் தான் உணர்வாகி, அறிவாகி, தெளிவாகி, ஞானமாகிறது.

தானே தெளிவு பெற தாமதம் ஆகும். என்பதால் தேடிப்போய் அறிவைப் பெறுவது இன்றியமையாததாகி விடுகிறது.

ஆக, ஒவ்வொரு மனிதனும் கற்பவனாகி விடுகிறான். கற்பவனுக்குக் கற்றுத் தரும் வல்லமை படைத்தவர்கள் கற்பிப்பவர்கள் ஆகிறார்கள்.

கற்பிப்பவர்களை - வாத்தியார், ஆசிரியர், குரு என்றும்; கற்பவர்களை - பயில்வான், மாணவன், சிஷ்யன் என்றும் அழைக்கப்படுவதை நாம் அறிவோம். ஏன் இப்படி பேதம் பிரித்துப் பேசப்படுகின்றார்கள்?