பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

81


91. குற்றம் பார்க்கில்

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பார்கள். சுற்றம் என்றால் உறவு என்று அர்த்தம். ஒரு மனிதனுக்கு உறவு என்பது அவனது உடல்தான். உற்றார் உறவினர் அல்ல. இது அடுத்து வருவது.

ஒரே உறவாகிய, உன்னத உறவாகிய உடலுக்கு பதினெட்டு குற்றம் இருக்கிறது என்கிறார்கள்.

1. பிறப்பு 2. பசி 3. தாகம்
4. பயம் 5. வெகுளி 6. உவகை
7. விருப்பம் 8. நினைப்பு 9. உறக்கம்
10. நரை 11. நோய் 12. மரணம்
13. மதம் 14. இன்பம் 15. அதிசயம்
16. வியர்த்தல் 17. கேதம்

18. கையறவு (வறுமை) என்பவையே பதினெட்டு வகைக் குற்றங்கள் ஆகும்.

இப்படி நொடிக்கு நொடி, நிமிஷத்துக்கு நிமிஷம் உடலில் குற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

குற்றம் என்றால் ஏதாவது ஒரு குறை, ஒரு பிழை, ஒரு துன்பம் என்று கடலிலிருந்து வரும் அலைகள் போல வந்து கொண்டேதான் இருக்கின்றன. அவற்றுடன்தான் நாம் வாழ வேண்டும்.

உடலில் குற்றம் பார்த்தால் நமக்கு அது சுற்றம் இல்லை. அதாவது சுகம் இல்லை. சொர்க்கமும் இல்லை.

அதனால்தான் உடல் குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள். சுகமாகிய உறவை வளர்த்துக் கொள்ளுங்கள்.