பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அழிய விரும்புகிற ஒருவரை ஆண்டவன் தடுத்தாலும் முடியாது. குடியையே குடியும் விரும்புகிறது. என்ன செய்ய?


96. முற்பகலும் பிற்பகலும்

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற முதுமொழிக்கு விளக்கம் எப்படி மாறிவந்திருக்கிறது பார்த்தீர்களா?

முற்பிறவியில் செய்த தீவினை, பிற்பகலில் வந்து தண்டிக்கும் என்ற கருத்து இன்று பொய்யாகி விட்டது.

முற்பகல் என்பது காலை, பிற்பகல் என்பது மாலை. காலையில் செய்கின்ற குற்றங்களுக்கு, அன்று மாலையே அவற்றிற்குரிய தண்டனை கிடைத்து விடுகிறது.

அதனால் தான் அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி மாறி தெய்வம் அன்றே கொல்கிறது. அரசுதான் அடக்கி வாசிக்கிறது.

அரசன் தான் நின்று கொல்கிறான், மனிதனாகிய தேகமாகிய தெய்வம் கொடுத்து. அதற்குறிய தண்டனையை அவ்வப்பொழுதே கிடைத்து விடுகிறது என்பது மிகுந்த அனுபவப்பூர்வமான உண்மையாகவே விளங்குகிறது.


97. முட்டாளுக்கு 8 மணி நேரத்தூக்கம்

தூக்கம் என்பது சோம்பேறியின் சுகமான வேலையல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் அத்யாவசியமான உன்னத வேலை.