பக்கம்:புதுப்புது சிந்தனைகள்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புதுப்புது சிந்தனைகள்

95


அதைத்தான் பாரதியும் அழகாக பாடியுள்ளார். கண்ணை விற்று சித்திரம் கொள்வாரோ! அழகான அற்புதமான, அமுதமான சித்திரம் போன்ற தேகத்தை, அன்புடன் ரசிக்காமல், வீணாக வாழ்கிற மக்களுக்கு, மறை முகமாகப் போதிக்கிறார் அந்தச் சித்தர்.

காயத்தை காயமாக்காதீர். அது சகாயம் தருகிற சக்தி படைத்தது. அதைக் காக்கும் உபாயத்தோடு வாழுங்கள். அந்த உபாயம் தான் காற்றைப் பிடிக்கும் கலை. காற்று தேகத்தில் நிறைந்திருக்கும் போதெல்லாம், தேகம் அழகாக இருக்கும். காற்று குறையக் குறையத்தான், நோய்களும், நோவுகளும் உண்டாகி, தேகத்தைக் குலைத்து விடுகின்றன.

ஆகவே, பொய்யல்லடா நம் தேகம்! அந்தச் சொல்லானது பொய்யடா! சித்திரம் என்பதே மெய்யடா! அதை மனதில் வையடா! என்று சொல்வதால் தான், சித்தர்கள் இன்றும் நம் சிந்தையிலே கோலோச்சிக் கொண்டு கம்பீரமாக வாழ்கின்றார்கள்.


104. மாரடைப்பு

மாரடைப்பு நோய் எந்த வயதினருக்கும் எந்த நிலையிலும் வரும். எப்பொழுதும் வரும். இதயம் பலஹீனம் அடைகிற போது எந்த நொடியிலும் வரும். 5 லிட்டர் அளவு நமது உடலுக்குள் இருக்கும் இரத்தம். அதை உடல் முழுவதும் அனுப்பி தூய்மை இழந்து வரும். இரத்தத்தை மீண்டும் கொண்டு வந்து தூய்மைப் படுத்தி திரும்பத் திரும்ப அனுப்பும் தெய்வீகப் பணியைத் தான் இதயம் செய்து வருகிறது.