பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒருவர் கையை - ஒருவர் பிடித்துக் கொண்டார்கள்.

-கு. அழகிரிசாமி சொல்லியது


நல்லதெல்லாம் பிடிக்காது!

நானும் [முல்லை முத்தையா] இன்னும் இரண்டு நண்பர்களும் புதுமைப்பித்தனோடு, ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்த போது, ஒரு முறை வழியில் கொத்தமங்கலம் சுப்புவைச் சந்தித்தோம். புதுமைப்பித்தனிடம் தம் கவிதைகளைப் படித்துக்காட்ட வேண்டுமென்று .சுப்புவுக்குப் பெரும் விருப்பம், தம் வீட்டுக்கு எங்கள் எல்லோரையும் அழைத்துச் சென்று தம் கவிகளைப் படித்துக் காட்டினார். எங்களுடைய கஷ்டத்துக்குப் பிரதிபலனாக, அவருடைய வீட்டில் உப்புமா தயாராக்கி இருந்தார். அதைச் சுப்புவின் சகோதரர் எங்களுக்குப் பரிமாறிவிட்டு, அதற்கு நெய் ஊற்றிக் கொண்டு வந்தார். அப்பொழுது புதுமைப்பித்தன், ‘எனக்கு நெய் வேண்டாம்’ என்றார். அதற்கு சுப்பு, அவனுக்கு நல்லதெல்லாம் பிடிக்காது’ என்றார். ‘அதோடு உன் கவிதையையும் சேர்த்துக் கொண்டு விடாதே!’ என்று படீரென்று சொன்னார் புதுமைப்பித்தன்.

14