பக்கம்:புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெயர் அடியில் இருக்கிறதே ஏன்?” என்றேன். அதற்கு “எல்லோரையும் தாங்கும் பொறுப்பு அவரைச் சேர்ந்தது; அதனால் தான். அவர் அடியில் இருக்கிறார்” என்றார் புதுமைப்பித்தன்.

நிரந்தர வாந்தி பேதி

தமிழ்நாட்டில் கொஞ்ச காலத்துக்கு முன், எந்தப் பத்திரிகையைப் புரட்டினாலும் ஒரு யோகியாரின் கவிதை, கதை, கட்டுரை, காவியம் ஏதாவது ஒன்று தென்படும். அல்லது எல்லாமே நிறைந்திருக்கும். இது பலருக்கும் வெறுப்பை உண்டாக்கியது. அதைப் பற்றி புதுமைப்பித்தன், “அது நிரந்தர வாந்திபேதி” என்றார்.

குளவிக் கூடு

பிரபலமான ஆசிரியர் ஒருவர் தினப் பத்திரிகை ஒன்று நடத்தினார். அதில் ‘குளவிக் கூடு’ என்ற மகுடமிட்டு கிண்டல் விஷயங்கள் எழுதப்பட்டு வந்தன. புதுமைப்பித்தனிடம் ஒரு முறை நான் (முல்லை முத்தையா) ‘குளவிக் கூடு’ எப்படி இருக்கிறது என்று விசாரித்தேன். அதற்கு அவர் “பத்திரிகை மண் மூட விட்டுத்தானே குளவிக் கூடு கட்டும்” என்றார். அந்த வாக்கு உண்மையாகி. பத்திரிகையும் நின்ற மண் மூடி விட்டது.

16