பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

156 புதுமைப்பித்தன் கதைகள் தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையிலும் மாப்பஸானைப் பற்றி அதிகமாக எதுவும் சொல்லவில்லை. புதுமைப்பித்தனின் இந்தப் போக்கு மாப்பஸான் மீது அவர் கொண்டிருந்த நெருங்கிய ஈடுபாட்டை மறைப்பதற்காக எடுத்துக்கொண்ட 'தற்காப்பு நடவடிக்கை என்றுதான் கொள்ள வேண்டும்.....) (அடிக்கோடு ஆசிரியர்களது) மேற்கோள், (தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் - பக்.159 - 158). புதுமைப்பித்தன் 'சிறுகதை' பற்றிய கட்டுரையொன்றில், 'சாதாரணமாகப் பிரெஞ்சுக் கதைகளிலும் ருஷ்யக் கதைகளிலும் சுருக்கமாக விஷயத்தைப் புதியமாதிரியில் எழுதப்படுகிறது. ஆங்கில நாட்டு கால்ஸ்வொர்த்தி, ஹார்டி, பிரெஞ்சு, மாப்பஸான், அனதோலி, பிரான்ஸுமுதலிய சிறுகதை ஆசிரியர்கள் சிறுகதை என்ற இலக்கியப் பகுதியை மிகவும் திறமையாக எடுத்தாண்டிருக்கிறார்கள் (புதுமைப்பித்தன் கட்டுரைகள் - பக்.37) என்று எழுதியிருக்கிறார். ஆனால் இது ஏனோ மாப்பஸானுக்குப் புதுமைப்பித்தன் சிறப்பிடம் கொடுத்ததாகக் கிருஷ்ணமூர்த்திக்குத் தெரியவில்லை. அடுத்து 'உலகத்துச் சிறுகதைகள்' என்ற நூலில் மாப்பஸானின் 'ஒரேயொரு கதை'யை மாத்திரமே அவர் சேர்த்திருந்தார் என்றும் கிருஷ்ணமூர்த்தி குறைப்பட்டுக் கொள்கிறார். 'உலகத்துச் சிறுகதைகள்' என்ற மொழிபெயர்ப்பில் அவர் ஹாலந்து நாட்டுக் கதை வரிசையில் மட்டும் லூயி கௌப்பிரஸின் இரண்டு கதைகளைச் சேர்த்துள்ளார். ஹாலந்து நாட்டுக்கதைகளில் லூயி கௌப்பிரஸின் கதைகளைத் தவிர வேறு கதை எதுவும் அவருக்கு அப்போது கிட்டாததே அதற்குக் காரணம். ஆனால் பிரான்ஸ் நாட்டுக் கதை வரிசையில் அவர் மூன்று கதைகளைச் சேர்த்திருக்கிறார். அவற்றில் ஒன்றுதான் மாப்பஸானின் 'பைத்தியக்காரி இதெல்லாம் மாப்பஸான் மீது புதுமைப்பித்தன் கொண்டிருந்த நெருங்கிய ஈடுபாட்டை மூடிமறைக்க எடுத்துக் கொண்ட தற்காப்பு நடவடிக்கை என்று எப்படிக் கூறமுடியும்? பிரான்ஸ் நாட்டுச் சிறுகதை ஆசிரியர்களைப் பற்றிக் கூறும்போது மாப்பஸான் பெயரையும், பிரான்ஸ் நாட்டுச் சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது மாப்பஸான் கதையையும் அவர் புறக்கணித்து விடவில்லையே! ஆனால், சிட்டிக்கோ புதுமைப்பித்தன் மாப்பஸான் மீது கொண்டிருந்த ஈடுபாட்டை மூடிமறைக்கிறார். என்று கூறியது தேனாக இனிக்கிறது.