பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புதுமைப்பித்தன் கதைகள் புதுமைப்பித்தன் சுயமாக எழுதிய சொந்தக் கதைகள் சிலவற்றின் மீதும், விமர்சனம், ஆராய்ச்சி என்ற பெயரால் விஷமத்தனங்கள் புரிந்து, இதே முத்திரையைக் குத்தச் சிலர் முயன்று வந்தனர்; வருகின்றனர். இத்தகைய விஷமத்தனங்களில் சிட்டிக்கு மட்டுமல்லாமல், க.நா.சு. உள்ளிட்ட வேறு சிலருக்கும் பங்குண்டு, இவ்வாறு புதுமைப்பித்தனின் தனிச்சிறப்பை ஏற்றுக் கொள்ளாமலும், முப்பதுகளில் எழுதி வந்த சிறுகதை ஆசிரியர்களில் அவரது சாதனைகளை ஏனையோரின் சாதனைகளைக் காட்டிலும் குறைவானதே என மதிப்பிட்டும், அவர் சுயமாக எழுதிய கதைகள் சிலவற்றின் மீதும் தழுவல் முத்திரை குத்தப்பாடுபட்டும், விமர்சனம் என்ற பெயராலும், ஆராய்ச்சி என்ற பெயராலும் புதுமைப்பித்தன் மீது புழுதிவாரித் தூற்ற முயன்று விஷமத்தனமாக எழுதிவந்த போக்கு எப்போது தொடங்கியது, என்னென்ன நோக்கங்களோடு தொடங்கியது, இத்தகைய போக்கும் நோக்கமும் இவ்வாறு எழுதி வந்தவர்களின் எழுத்துக்களிலும் கூற்றுக்களிலும் எவ்வாறு நேர்முகமாகவும், இலைமறை காய்மறையாக நாசூக்காகவும், நயவஞ்சகத்தனமாகவும் பிரதிபலித்தன என்பதையெல்லாம், தமிழ் வாசகர்களுக்கு, குறிப்பாக, புதுமைப்பித்தனின் எழுத்துக்களில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட இலக்கிய ரசிகர்களுக்கு இனம் காட்டி உண்மை நிலைகளை எடுத்துரைப்பதே எனது இந்நூலின் நோக்கமாகும்.