பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விஷமத்தனத்துக்கு முதலில் வித்திட்டவர் மேற்கூறிய விஷமத்தனம் புதுமைப்பித்தனின் முதல் சிறுகதைத் தொகுதி நூல் வடிவில் வெளிவந்த காலத்திலேயே தொடங்கி விட்டது. புதுமைப்பித்தனின் 29 சிறுகதைகளைக் கொண்ட அவரது முதல் சிறுகதைத் தொகுதி 1940ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சென்னை நவயுகப் பிரசுராலயத்தின் வெளியீடாக வெளிவந்தது. அந்தத் தொகுதிக்கு அப்போது சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவரும், தாமும் தமிழில் சில - சிறு கதைகளையும் விமர்சனக்கட்டுரைகளையும், நூல்களையும் எழுதி வந்தவருமான ரா, ஸ்ரீ. தேசிகன் என்பவர் ஒரு. நீண்ட முன்னுரை எழுதியிருந்தார். இம் முன்னுரையில் மேலைநாட்டு இலக்கியங்களிலும் விமர்சனங்களிலும் தமக்கிருந்த பரிசயத்தையும், அறிவையும் புலப்படுத்தும் விதத்தில் ஆங்காங்கே சில மேலைநாட்டு இலக்கிய கர்த்தாக்களின் பெயர்களையும் படைப்புக்களையும் குறிப்பிட்டு, சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தின் இலக்கணம் பற்றிக் கிட்டத்தட்ட நான்கு பக்கங்களுக்கு விளக்கமும் எழுதி, புதுமைப்பித்தன் கதைகளைப் பற்றிக் கூற வரும்போது பின்வருமாறு பாராட்டியே எழுதியிருந்தார். 'காதல் கதைகள், சீர்திருத்தக் கதைகள் இவற்றுக்கெல்லாமிடையே வேறொரு குரல் கேட்கிறது. அது என்ன என்று திரும்பிப் பார்த்தால் மேஜைமீது புதுமைப்பித்தன் சிறுகதைப் புத்தகம் விரிந்து கிடக்கிறது. சிறுகதை மர்மங்களை நன்கறிந்துள்ள 'புதுமைப்பித்தனின் கதைகளுக்கிடையே திரியும்பொழுது ஒரு கவியுலகிலே திரிகிற உணர்ச்சி எனக்கு வருகிறது. இவருடைய கதை ஒவ்வொன்றும் ஒரு தனி அநுபவ முத்திரை பெற்றிருக்கிறது. ஒவ்வொன்றிலும் உண்மையின் நாதம் தொனிக்கிறது. இவருடைய சில கதைகளை ரஸம் ததும்புகிற பாடல்கள் என்றே சொல்லிவிடலாம்'. மேற்கண்டவாறு தொடங்கி, தெருவிளக்கு, இது மிஷின்யுகம், மனிதயந்திரம், கவந்தனும் காமனும், பொன்னகரம், காலனும்