பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- புதுமைப்பித்தன் கதைகள் கிழவியும், ஞானக்குகை, சிற்பியின் நரகம், நினைவுப்பாதை, துன்பக்கேணி, மனக்குகை ஓவியங்கள் ஆகிய புதுமைப்பித்தனின் 11 கதைகளின் சிறப்புக்களைச் சுட்டிக்காட்டிவிட்டு, முன்னுரையின் முடிவில் பின்வருமாறு கூறிமுடிக்கிறார், 'ஒரு கவியுள்ளம்- சோகத்தினால் சாம்பிய கவியுள்ளம் வாழ்க்கை முட்களில் விழுந்து இரத்தம் கக்குகிற உள்ளம் - கதைகளின் மூலம் பேசுகிறது. இதுதான் நான் கண்டது இந்தக் கதைக்கொத்திலே.' - புதுமைப்பித்தன் கதைகளுக்குத் தேசிகன் எழுதியுள்ள முன்னுரையை மேலோட்டமாகப் படித்துப் பார்த்தால், அது புதுமைப்பித்தனின் தனிச்சிறப்பையும், அவரது கதைகளின் மேன்மையையும் தொட்டுக்காட்டியுள்ள நல்ல முன்னுரை என்றே கூறத் தோன்றும். இதனால்தான் இந்நூலின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள, 1987இல் வெளிவந்த புதுமைப்பித்தன் கதைகளின் மொத்தத் தொகுதிக்கு இத் தொகுதியில் ரா.ஸ்ரீ. தேசிகனின் முன்னுரையும் மறு பிரசுரம் ஆகியுள்ளது) அணிந்துரை எழுதியுள்ள ஜெயகாந்தன், தேசிகனின் முன்னுரையைப் பாராட்டிப் பின் வருமாறு எழுதிவிடுகிறார்: 'புதுமைப் பித்தன் வாழ்ந்த காலத்திலேயே அவரது கதைத் தொகுதிக்கு முன்னுரை எழுதிய திரு.ரா.ஸ்ரீ.தேசிகன் கூறியிருப்பதை விடவும் சிறப்பாகவும் சரியாகவும் சொல்லுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. தமிழில் குறிப்பிடத்தக்க முன்னுரைகள் என்று சிலவற்றை நான் குறிப்பிடுவேன் . அவற்றில் ஒன்று மகாகவி பாரதியாரின் கவிதைகளுக்கு மகரிஷி வ.வெ.சு. அய்யர் எழுதியது மற்றொன்று புதுமைப்பித்தன் கதைகள் என்ற நூலுக்கு ரா.ஸ்ரீ.தேசிகன் எழுதியது.. ஆனால் ஜெயகாந்தனையே இவ்வாறு மயக்கம் கொள்ள வைத்த தேசிகனின் இந்த முன்னுரையை நாம் ஊன்றி உற்று நோக்கிப் படித்தால்தான் நான் மேலே குறிப்பிட்ட, விமர்சனம் என்ற பெயரால் புரியப்படும் விஷமத்தனம் இந்த முன்னுரையில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்பதைப் புரிந்து சொள்ளமுடியும். அத்தனை சாதுரியமாகவும் சாமர்த்தியமாகவும் எழுதப்பட்ட முன்னுரை இது. புதுமைப்பித்தன் கதைகளைப் பற்றி எழுதவந்த இந்த முன்னுரையில், தேசிகன் தமிழ்நாட்டில் சமீபகாலத்தில் அலர்ந்துள்ள கதைகள் பல' என்று தொடங்கித் தமக்குக் கிடைத்த கதைகளில் அதிக