பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் -- - -- - - - - - அழகாய் அமைந்த சிலவற்றைக் குறிப்பிடுகிறார். அவ்வாறு குறிப்பிடும் போது, ஒவ்வொரு கதையின் சிறப்பையும் இரண்டு மூன்று வரிகளில் எழுதி, அந்தக் கதைகளின் தலைப்புக்களை மட்டுமே தெரிவிக்கிறார். இறுதியில் 'இக்கதைகள் என் அறிவு வட்டத்திற்குள் மிதந்து வருகின்றன' என்று கூறி முடிக்கிறார். அந்தக் கதைகளின் விவரம் வருமாறு. குளத்தங்கரை அரசமரம், தேவானை, தாய், கலைஞன் தியாகம், பூச்சூட்டல், விடியுமா?, ஞாபகம், ராமராயன் கோயில், பொன்வளையல், பெற்றோர்கள், என்று வருவானோ?-ஆகிய 11 கதைகளே அவை. இவ்வாறு இந்தக் கதைகளைப் பற்றி எழுதும்போது அவற்றின் ஆசிரியர்கள் யார் யார் என்பதை மட்டும் தேசிகன் கூறாமலே தவிர்த்து விடுகிறார். இந்தக் கதைகளைப் படித்துப் பார்த்தவர்களுக்குத்தான் அவர்கள் யார் யார் என்ற உண்மை தெரியும்; புரியும். (இந்தக் கதாசிரியர்கள் யார் யார் என்பதை இந்நூலில் நாம் பின்னர் உரிய இடத்தில் வெளிப்படுத்துவோம்.) உண்மையில் இந்தக் கதைகளைத் தேசிகன் பட்டியல் போட்டுக் காட்டுவதன் அந்தரங்க நோக்கம் என்ன? புதுமைப்பித்தனின் கதை ஒவ்வொன்றும் ஒரு தனி அநுபவ முத்திரை பெற்றிருக்கிறது' என்று எழுதி, புதுமைப்பித்தனின் தனித்தன்மையைச் சுட்டிக்காட்டுவது போல் தேசிகன் பின்னர் காட்டிக்கொண்ட போதிலும், புதுமைப்பித்தனைப் போலவே தமிழில் தலைசிறந்த சிறுகதைகளை எழுதியவர்களும் அவரது காலத்திலேயே இருந்தனர். அவர்களில் பத்தோடு பதினொன்றாய்' புதுமைப்பித்தனும் தலைசிறந்த கதைகளை எழுதியுள்ளார் என்று மறைமுகமாக, நாசூக்காகச் சுட்டிக்காட்டுவதே அந்த நோக்கமாகும். இதைத்தான் நான் விமர்சனம் என்ற பெயரால் புரியும் விஷமத்தனம் என்கிறேன். எனது இந்தக் கருத்தை அவரது முன்னுரையில் காணப்படும் வேறு சில வரிகளும் உறுதிப்படுத்துகின்றன எனலாம், முன்னுரையின் தொடக்கப் பகுதியிலேயே, தமிழ்நாட்டில் சிறுகதை இலக்கியம் நன்கு மலர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுவிட்டு, இந்தக் கதை மலர்களில் நம் நாட்டு வித்துக்களிலிருந்து வெடித்து வெளிக் கிளம்பினவைகள் எத்தனை? வெளிநாட்டு வித்துக்கள் நம் நாட்டு உரம் பெற்று வளர்ந்தனவா? அல்லது அந்திய நாட்டு