பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புதுமைப்பித்தன் கதைகள் மலர்கள்தான் நம் நாட்டு மலர்கள் போலப் போலிச் சோபையைக் கட்டுகின்றனவா?' என்று கேள்விகளை எழுப்பி, 'உற்றுநோக்கினால் கதை மலர்களில் இந்த மூன்று ரகங்களும் விரவிக்கிடக்கக் காணலாம்' என்று பீடிகை போட்டு, தாம் பின்னால் கூற விருப்பத்தைக் குறித்து, வாசகர்களுக்குக் கோடி காட்டி, அவர்களை மறைமுகமாக உஷார்ப்படுத்திக் கண் சிமிட்டிவிட்டுத்தான், தேசிகன் பின்வரும் பக்கங்களில் புதுமைப்பித்தன் கதைகளை விமர்சிக்கத் தொடங்குகிறார். அவ்வாறு விமர்சிக்கையில், வருமானமின்றிப் படுக்கையில் அடிபட்டு விழுந்து கிடக்கும் கணவன் ஆசையுடன் கேட்ட பால்கஞ்சியைக் காய்ச்சிக் கொடுப்பதற்காகத் தன் கற்பை முக்கால் ரூபாய்க்கு விலைபேசிச் சோரம் போன அம்மாளுவைச் சித்தரிக்கும் புதுமைப்பித்தனின் பிரசித்திபெற்ற கதையான 'பொன்னகரம்' கதையைச் சுருக்கிக் கூறி, . 'இந்தக் கதையில் வருகிற அம்மாளுவை நினைக்கிற பொழுது, விக்டர் ஹியூகோ சிருஷ்டித்த பாண்டைன் (Fantine) என்ற பெண்ணின் ஞாபகம் வருகிறது' என்றும், இதேபோல் இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு நேர்ந்த அவலங்களையும் அவமானங்களையும் பற்றிக் கூறும் பிரசித்தமான 'துன்பக்கேணி' என்ற நெடுங்கதையைப் பற்றிக் கூற வரும்போது, "இக்கதையைப் படிக்கும் பொழுது, லவலின் போவிஸ் (1lcwclin Powys) எழுதிய கருங்காலியும் தந்தமும் (Ebony and ivory) என்ற புத்தகத்திலுள்ள ஒரு நிகழ்ச்சி என் ஞாபகத்துக்கு வருகிறது. கறுப்புக்கு வெள்ளை தந்தது பரங்கிப் புண்தான். அவள் தந்தாள் அவன் வாங்கிக் கொண்டான் என்று போவிஸ்' கதையை முடிக்கிறார். இந்த முறையில்தான் 'துன்பக்கேணி'யும் செல்கிறது' என்றும் எழுதியுள்ளார் தேசிகன். ஆங்கிலப் பேராசிரியரான தேசிகன் தாம் அயல்நாட்டு இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர் என்ற தமது அதிமேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்வதற்காக, எழுதப்பட்ட வரிகளாக இவை தோன்றவில்லை. மாறாக, அவர் முன்னுரையில் கோடிகாட்டிக் கூறியிருந்த பீடிகையைக் கருத்தில் கொண்டு, அவர் கூறியபடியே, உற்று நோக்கினால், இந்த மேலை நாட்டுக் கதாசிரியர்களின் கதாபாத்திரங்களையும் கதை நிகழ்ச்சிகளையும் தமதாக்கி அவற்றைத் தழுவித்தான் புதுமைப்பித்தன் இந்த இரு