பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 புதுமைப்பித்தன் கதைகள் - கைப்பிள்ளையை வைத்துக்கொண்டு வேலை செய்து பிழைப்பது அவளுக்குக் கடினமாக இருந்தது. எனவே பாரீசுக்கு அருகிலுள்ள மாண்ட்ரிபர் மீல் என்ற ஊரில் ஒரு சத்திரத்தை நடத்தி வந்த, இரு குழந்தைகளின் பெற்றோரான தெனார்டியர் தம்பதியரின் பராமரிப்பில், இரண்டு வயது முடிந்த தன் குழந்தை கோஸெட்டை விட்டு விட்டுச் செல்லத் தீர்மானித்தாள். அதற்கு அந்தத் தம்பதியர் பணம் கேட்கின்றனர். அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டுக் கையில் மிஞ்சிய சில்லறைக் - காசுகளோடு, பாண்டைன் தொலைவிலுள்ள தன் சொந்த ஊருக்கு நடந்தே செல்கிறாள். குழந்தையின் பராமரிப்புக்காக மாதா மாதம் பணம் அனுப்ப வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டுச் சொந்த ஊருக்குச் சென்ற பாண்டைன் அங்குக் கூலி வேலை செய்து பிழைக்கிறாள். தன் வருமானம் குறைவாக இருந்த போதிலும், வாயைக்கட்டி வயிற்றைக் கட்டித் தன் பிள்ளையின் பராமரிப்புக்கான பணத்தை மட்டும் மாதா மாதம் தவறாது அனுப்பி வருகிறாள். குழந்தையைப் பராமரித்து வளர்ப்பதாகக் கூறிய தெனார்டியர் தம்பதியரோ பணம் பிடுங்கிப் பிசாசுகள். அதிலும் பாண்டைனின் - குழந்தையான கோஸெட் கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்பதைத் தெரிந்து கொண்ட அந்தத் தம்பதியர் பாண்டைனிடம் அதிகப் பணம் கேட்டு நச்சரிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் பாண்டைனிடமிருந்து பணத்தைக் கறந்து கொண்டிருந்தார்களே தவிர, அவளது குழந்தையைச் சரிவரப் பராமரிக்கவில்லை . அதற்குப் போதிய உணவோ உடையோ வழங்காமல், அந்தப் பிள்ளையை வேலை வாங்குகின்றனர். ஆனால் இதெல்லாம் பாண்டைனுக்குத் தெரியாது. ஒரு முறை பாண்டைனுக்குப் போதிய வருமானமில்லாமல், அவள் கடன்காரர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலையிலிருந்த போது, 'உன் குழந்தைக்குக் குளிருக்கேற்ற கம்பளிச்சட்டை இல்லை. அதனால் அவள் சட்டை இல்லாமல் இருக்கிறாள். அதற்கு உடனே பணம் அனுப்பு' என்று அந்தத் தம்பதியரிடமிருந்து கடிதம் வருகிறது. இந் நிலையில் பாண்டைன் பணத்துக்கு வேறு வழியின்றி ஒரு சவரத் தொழிலாளியிடம் சென்று, இடுப்புவரை நீண்டு வளர்ந்த தனது அழகிய பொன்னிறக் கூந்தலை வெட்டி எடுத்துக்கொண்டு பணம் தருமாறு கேட்கிறாள். அவ்வாறு தன் அழகிய கேசத்தை இழந்து பெற்ற பணத்தைத் தன் குழந்தைக்காக அனுப்பிவிட்டு, மொட்டைத் தலையில் தொப்பியணிந்து பலரது. பரிகாசத்துக்கும் கேலிக்கும் உள்ளாகி வாழ்ந்து வருகிறாள். இதன்பின் கோஸெட்டுக்கு விஷக்காய்ச்சல்