பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.மு.சி. ரகுநாதன்

241


செல்லப்பாவின் கட்டுரை வெளிவந்த சுதேசமித்திரனிலேயே வெளிவந்திருப்பதையும், செல்லப்பா சிறுகதை மணிக்கொடியில் வெளிவந்த தமது ‘சரஸாவின் பொம்மை' கதையுடனேயே தமிழில் மணியான சிறுகதை வளர்ச்சி தொடங்கி, தாம் கதை எழுதுவதை நிறுத்தியவுடனேயே தமிழில் சிறுகதைக்கலை அஸ்தமித்துப் போய்விட்டதாகக் கருதிக் கொண்டிருந்ததையும் நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.

செல்லப்பா, க.நா.சு. போன்றவர்களைக் கருத்தில் கொண்டுதான் ராமையா தமது நூலில் மேற்கண்டவாறு எழுதியிருக்கிறார் என்பது தெளிவு.

ஆனால் மணிக்கொடி என்பது 'ஒரு தத்துவம், சக்தி, காலவேகம்' என்று ராமையா கூறியள்ளது எந்த அளவுக்குப் பொருத்தமானது, அல்லது பொருத்தமற்றது என்பது விவாதத்துக்குரிய விஷயமாகும். இதற்கு நாம் மணிக்கொடிப் பத்திரிகை தோன்றி நடந்து வந்த காலம்; அந்தக் காலத்தில் அதில் குணாம்சரீதியில் ஏற்பட்ட மாற்றங்கள், அந்தக் காலத்தில், உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் நிலவிய நிலைமைகள், நிலவிய இயக்கங்கள், அவற்றின் தத்துவங்கள், இவற்றின்பாலும் இலக்கியப் படைப்பின்பாலும் மணிக்கொடி எழுத்தாளர்களுக்கிருந்த கண்ணோட்டங்கள் முதலிய பலவற்றையும் கருத்தில் கொண்டுதான் விடைகாண வேண்டும்; விடைகாண முடியும்.

மணிக்கொடிப் பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்த முப்பதாம் ஆண்டுகள் மறுமலர்ச்சியும் நிலவி பலவிதத்திலும் முக்கியமானவை. இந்தக் காலம் காந்தியடிகள் தேச விடுதலைப் போராட்டத்தை உப்புச் சத்தியாக்கிரகம், கள்ளுக்கடை மறியல், அன்னியத் துணிப்கிஷ்காரம், சட்டமறுப்பு இயக்கம் முதலிய பலவற்றாலும் வெகுஜன இயக்கமாக மாற்றிய காலம். 'பகத்சிங்கும் அவரது தோழர்களும் தூக்கிலிடப்பட்டதைக் கண்டு இந்திய நாட்டு இளைஞர்களின் உள்ளம் கொதித்துப் போயிருந்த காலம். மேலும், இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய முப்பெரும் மானிட லட்சியங்களைப் பாடுபொருளாக்கிப் பாடிவைத்துச் சென்ற மகாகவி பாரதியின் பாடல்கள் தமிழ்நாட்டில் புத்துயிரும் புது வலுவும் பெற்று, வீதிகளில் முழங்கித் தமிழ்மக்களை வீறுகொள்ளச் செய்த காலம், உப்புச்சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் பாரதியின் 'அச்சமில்லை' முதலிய வீறுமிக்க பாடல்களைப் பாடிக் கொண்டுதான் உப்பு எடுக்கச் சென்றனர். '1908