பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் கொண்டு பிழைப்பதற்கு வழி தெரியாமல் வறிய நிலையில் ரயிலேறிச் சென்று மதுரையிலும் திண்டுக்கல்லிலும் இருந்த உறவினர் வீடுகளில் சில நாட்களைக் கழித்துவிட்டு, பின்னர் தம் மனைவியைத் திருவனந்தபுரத்துக்கு அனுப்பியபின் தாம் மட்டும் பத்திரிகைத்துறையில் சேர்ந்து , பிழைப்புக்கு வழிதேடும் எண்ணத்தோடு சென்னைக்குச் சென்று சிவமாகி நின்ற கதையை, நான் எழுதிய புதுமைப்பித்தன் வரலாற்று நூலில் குறிப்பிட்டிருக்கிறேன். அவர் அவ்வாறு மதுரைக்குச் சென்றிருந்த போது, அக்காலத்தில் பெரும்பாலும் சேரி வட்டாரங்களாகவே இருந்த கரிமேடு, பொன்னகரம் ஆகிய பகுதிகளைச் சுற்றிப் பார்த்தார். அங்கு வசித்து வந்த மில் கூலிகள், அன்றாடங் காய்ச்சிகளான - பிற கூலிவேலைக்காரர்கள் மற்றும் பிற அடித்தட்டு மக்களின் வறிய வாழ்க்கை நிலைகளையும், அவர்கள் வசித்து வந்த வட்டாரங்களின் அவலச்சூழ்நிலைகளையும் அவர் நேரில் கண்டு அவற்றை மனத்தில் பதிய வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அங்கு அவர் கண்டறிந்த அனுபவத்தின் பிரதிபலிப்புத்தான் பொன்னகரம் என்ற கதை. அவலச் சூழ்நிலைமிக்க வாழ்க்கையைச் சித்தரித்துக்காட்டும் இந்தக் கதைக்கு அவர் 'கரிமேடு' என்ற தலைப்பை வைத்திருந்தாலும் அது பொருத்தமாகவே இருந்திருக்கும். ஆனால், அவலச்சூழ்நிலையும் வறுமையும் தாண்டவமாடிய ஒரு வட்டாரத்துக்குப் பொன்னகரம்' என்று வஞ்சப்புகழ்ச்சி போன்று ஒரு பெயர் வாய்த்திருந்த விசித்திரம், இயல்பாகவே அங்கத நோக்கும் போக்கும் கொண்ட புதுமைப்பித்தனை வெகுவாகக் கவர்ந்திருக்க வேண்டும். இந்த வஞ்சப்புகழ்ச்சித் தன்மையைச் சுட்டிக்காட்டும் விதத்திலேதான் அவர்தம் கதைக்குப் 'பொன்னகரம்' என்று தலைப்பிட்டார். மேலும் வஞ்சப்புகழ்ச்சித் தன்மை மிக்க இந்தப் பெயர், அதேபோன்ற அவலச்சூழ்நிலையும் வறுமையும் நிலவும் எந்தவொரு சேரி வட்டாரத்தையும் குறிக்கலாம் என்ற நினைப்பில்தான், புதுமைப்பித்தன் தமது கதையில் 'பொன்னகரம்' என்பது மதுரை நகரைச்சேர்ந்த ஒரு வட்டாரம் என்பதை மறந்தும்கூட எங்கும் குறிப்பிடவில்லை . மேலும் 'பொன்னகரம்' என்ற கதையை எழுதுவதற்கு, புதுமைப்பித்தன் அங்கு நேரில் கண்ட வாழ்க்கை நிலைமைகள் மட்டுமல்லாமல், மகாகவி பாரதியின் பாடல் வரிகளும் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் வழங்கியுள்ளன என்று நாம் ஆதாரபூர்வமாகக்