பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் பழக்கம் அவரைக் கடைசிவரை விடவில்லை என்றும் சொல்லலாம், 'தழுவலை ஒரு இலக்கிய முறையாகவே, ஒரு வெற்றிகரமான பத்திரிகைக் கோஷ்டி அப்பொழுது கைக்கொண்டிருந்தது. (கல்கி, துமிலன், தேவன் ராலி) சொல்லியும் சொல்லாமலும் பல நல்ல கதைகளையும், மட்டமான கதைகளையும் தழுவல் செய்து தங்கள் பெயரில் போட்டுக் கொள்வது என்பது தமிழ்நாட்டில் ஒரு சாதாரணமான பழக்கமாக இருந்தது. பலர் மூல ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்லாமலே, எல்லாம் தங்கள் சொந்தக் கற்பனையே போலப் பாசாங்கு பண்ணிப் புகழ் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். புதுமைப்பித்தன் பிற்காலத்தில் தழுவல்காரர்களையும், தழுவல் கட்சியையும் வன்மையாகக் கண்டித்தாலும் கூட, அவசியம் நேர்ந்தபோது, தன் சொந்தக் கற்பனை ஓடாத சில சமயங்களில் சில கதைகளைப் பெயர் சொல்லாமலும் கூடத் தழுவி எழுதியதுண்டு' (அடிக்கோடிட்டது ரகுநாதன்) மேற்கண்ட கூற்றின் மூலம் க.நா.சு. உண்மையில் சகட்டுமேனிக்குப் புதுமைப்பித்தன் மீது தழுவல் இலக்கியக் கர்த்தா என்ற முத்திரையைக் குத்தவே முயன்றுள்ளார் என்பது தெளிவு. இதன் மூலம், புதுமைப்பித்தன் எழுத ஆரம்பித்த காலந்தொட்டு அவரது இறுதிக்காலம் வரை, பல வெளிநாட்டுக் கதைகளைத் தழுவி எழுதி, அவற்றைத் தமது சொந்தக் கதைகள் என்று உரிமை கொண்டாடிக். கொண்டார் என்று ஒளிவு மறைவின்றி உணர்த்தவே க.நா.சு. முயன்றிருக்கிறார். ஆனால் இங்கு ஒன்றை நினைவூட்டிக் கொள்ள வேண்டும், மேலைநாட்டு இலக்கியங்களையெல்லாம் கரைத்துக் குடித்த மேதாவி என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கும் க.நா.சு., புதுமைப்பித்தன் உயிர் வாழ்ந்த காலத்திலும் சரி, அதற்குப்பின்னர் இந்த முன்னுரையை எழுதிய காலம் வரையிலும் சரி, புதுமைப்பித்தன் தழுவி எழுதிய கதை இது என்று அவரது ஒரு கதையைக்கூட ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டி எழுதியதில்லை. சொல்லப்போனால் 1937 இல் ராமையா காலத்து 'மணிக்கொடி'ப் பத்திரிகையில் 'யாத்ரா மார்க்கம் என்ற பகுதியில் புதுமைப்பித்தன் 'கதைகளைத் தழுவல் செய்வது கூடாது என்று எழுதி, ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்த காலத்தில், அந்த வாதத்தில் பங்கு கொண்டு, தழுவல் செய்வது தவறல்ல, 'தழுவலே கலாம்சங்கள் அதிகம் பொருந்தியது', (மணிக்கொடி காலம்-, பி.எஸ், ராமையா. பக்.353) என்று வாதாடியவர்தான் க.நா.சு. . அந்த விவாதத்தின்போது கூட, 'தழுவல் கூடாது , என்று கூறும் நீரே தழுவல் கதைகளை