பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ .மு.சி. ரகுநாதன் 287 ராமையர் (பக்.68):. மணிக்கொடி பத்திரிகையின் சமூகக் கொள்கையும் எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் ஓர் விலை என்பதுதான்" (பக்.69) என்று எழுதிவிட்டு, அதன்பின் பல பக்கங்கள் தாண்டி, இந்த சமத்துவக் கருத்து முதன் முதலாக, 'மணிக்கொடி' வழியாகத்தான் புதிய தமிழ் இலக்கியத்தில் இடம் பிடித்தது அல்லது பெற்றது என்று உரிமையும் கொண்டாடியுள்ளார் (மணிக்கொடி காலம் - பக்.186): இது உண்மைதானா? உண்மையில் தமிழில் புதிய இலக்கியம் என்பது இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியுடனேயே பிறந்தது. இருபதாம் - நூற்றாண்டின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கே முதல்வராகவும் முன்னோடியாகவும் இருந்தவன் பாரதியே. மேலும் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி,. அரசியல் விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து, மனித சமத்துவத்துக்கான விடுதலை மார்க்கத்தை முதன் முதலில் வரையறுத்துக் கூறியவனும் பாரதியேயாவான். என்றாலும் மணிக்கொடி வழியாகத்தான் புதிய இலக்கியத்தில் சமத்துவக் கருத்து முதன் முதலாக இடம் பிடித்தது அல்லது பெற்றது என்று ராமையா உரிமை கொண்டாடியதன் பொருள் என்ன? தமிழில் புதிய இலக்கியம் என்பதே சிறுகதை மணிக்கொடி எழுத்தாளர்களான தம்மால்தான் தோன்றியது என்று கூற முற்படுவதே இதனுள் தொக்கி நிற்கும் பொருளாகும். இது கு.ப.ரா. எழுதிய, முன்னர் குறிப்பிட்ட 'புது எழுத்து' என்ற கட்டுரை மூலமாகவும் தெளிவாகிறது. இங்கிலாந்திலிருந்து 1940 முதற்கொண்டு பெங்குவின் பதிப்பகம் ஜான் லெஹ்மானை ஆசிரியராகக் கொண்டு மாதம் ஒரு புத்தகமாக வெளியிட்டு வந்த 'பெங்குவின் நியூ ரைட்டிங்' என்ற சஞ்சிகையின் சில இதழ்களைப் படித்துவிட்டு, தமக்கு எழுந்த எண்ணங்களைப் 'புது எழுத்து' என்ற கட்டுரையாக எழுதிய கு.ப.ரா.: 1940 முற்பகுதியில் எழுத்து, மே 1959 - ஒவ்வொரு கலைஞனுடைய எழுத்துக்கும் கொள்கை என்ற பெயர் இருந்தே தீர வேண்டும். இந்த முறையில் தமிழ்நாட்டில் தற்காலம் எழுதி வரும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு கொளகை இருப்பது தென்படுகிறது. பொதுவாக அவர்களுடைய எழுத்துக்களைச் சில முக்கியமான பிரிவுகளின் கீழ் கொண்டு வந்துவிடலாம்' என்று எழுதியுள்ளார். இதனைத் தொடர்ந்து சென்ற பத்து வருஷங்களுக்குள்தான். அநேகமாக இந்தப் புது எழுத்து பூராவும் தோன்றியிருக்கிறது என்று பொதுவாகக் கொள்ளலாம். பாரதியும் - வ.வெ.சு. அய்யரும் - இந்தக் - காலத்துக்கு முன்