பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொ.மு.சி. ரகுநாதன் 289 நுழைவுப் போராட்டத்தின்போது சத்தியாக்கிரகத் தொண்டர்களின் போராட்டச் செய்திகள், 1924ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்து 'இந்து' இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் ஒன்று 'சத்தியாக்கிரகத் தொண்டர்கள்' ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கோவிலின் நான்கு வாயில்களையும் நோக்கி அணி அணியாகச் சென்று, தடுக்கப்பட்ட பகுதிகளில் சத்தியாக்கிரகம் செய்கின்றனர். தேசியப் பாடல்களைப் பாடிக்கொண்டே அவர்கள் அணிவகுத்துச் செல்கிறார்கள், அவற்றுள் அவர்கள் மிகவும் விரும்பிப் பாடுவது பாரதி பாடல்களே, இது ஈ.வே.ரா,. அவர்கள் காங்கிரசிலிருந்த காலத்தில் நடைபெற்றதாகும். ஆனால் அவர் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பின்னர், அவ்வியக்கத்திலும் பாரதி பாடல்கள் பயன்படுத்தப்பட்டன. 1933 ஆம் ஆண்டு நாகைப்பட்டினத்தில் நடைபெற்ற தஞ்சை ஜில்லா முப்பத்தெட்டாவது சுயமரியாதை மாநாட்டரங்க வாசலில் இரண்டு முக்கிய வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அவை; 1. பரிபக்குவம் அடைபாத புரட்சியால் பயனில்லை . புரட்சி என்ற சொல்லுக்குள் 'கொல்லாமை' என்ற பொருளில்லை - லெனின் 2. தனியொருவனுக் குணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் - - பாரதி இதனைப் பற்றிய செய்தி ஏப்ரல் பதினாறாம் தேதி குடியரசு' இதழிலும் வெளியாகியுள்ளது. 1925 ஆம் ஆண்டு பெரியாரால் தொடங்கப்பட்ட குடியரசு' வார இதழில் அந்த ஆண்டு நவம்பர் முதல் வாரம் வரை, முற்பக்கத்தில் 'குடியரசு' பெயர் முத்திரையின் கீழ் எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம் எல்லோரும் இந்திய மக்கள் எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லோரும் இந்நாட்டு மன்னர் - பாரதி என்கிற பாரதியின் புகழ் பெற்ற வரிகளும், 'பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்' ஒழுக்கமுடைமை குடிமை, இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்'.