பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

400 புதுமைப்பித்தன் கதைகள் கொண்டு, இறுதியில் அவள் அபவாதத்துக்கு அஞ்சித் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணமாக இருந்தவன். அவள் எனது லட்சியம், வேறு ஒருவனைக் கலியாணம் செய்து கொண்டு அவனைக் காதலித்திருப்பவனைக் காதலிக்க எனக்கு உரிமையுண்டா? உணர்ச்சி, உரிமையைத்தான் கவனிக்கிறதாக்கும்!" என்று “எனது காதல் பாபம்' எனக்கும் தெரியத்தான் செய்கிறது. ஆனால் இம்மாதிரியான பாபங்கள் - எத்தனை வேண்டுமானாலும் செய்யலாம். செய்ய வேண்டும். பாபந்தான் மனிதனது உடலைப் புனிதமாக்குகிறது என்றும் தனது காமவேட்கைக்கு, அராஜகச் செயலுக்கு நியாயம் கற்பித்தவன். இத்தகைய ஒரு பாத்திரம் தன்னிலைக் கூற்றாக மனிதனைப்பற்றிக் கேவலமாகக் கூறும் கூற்றை புதுமைப்பித்தனின் கூற்றாகக் கொண்டு, அவர் மனிதனையே மதித்தவரல்ல என்று எவ்வாறு முடிவு கட்டமுடியும்? சொல்லப்போனால், தன் உடவை விற்றுப் பிழைக்கும் விலைமகளிடம்கூட, மான உணர்ச்சி உண்டு என்பதைக் கவந்தனும் காமனும் (வ.ரா. மணிக்கொடி-22-7-1934) என்ற கதையின் மூலமும், ஊரைக் கொள்ளையடித்துத் திருட்டுத் தொழிலில் உயிர்வாழும் திருடனுக்குக்கூட, ஏழைகள்பால் இரக்க உள்ளமும் தருமசிந்தையும் உண்டு என்பதைச் 'சங்குத் தேவனின்' தர்மம். (காந்தி, 25-4-1934) என்ற கதையிலும் எடுத்துக் காட்டியவர் தான் அவர். 'கடவுளின் சிருஷ்டி'யான மனிதனின் உயர்வை அவர் எவ்வாறு மதித்தார் என்பதை, அவர் கடவுளர்களையும் மனிதனையும் பாத்திரங்களாகக் கொண்டு எழுதிய கதைகள் நன்கு புலப்படுத்துகின்றன, 'கோபாலபுரம்' கதையில் வரும் பாத்திரத்தின் கூற்றைப் புதுமைப்பித்தனின் சொந்தக் கருத்தாகக் கொண்டு; அவர் மனிதனை மதியாதவர் என்று கூறுகின்ற என்.ஆர். தாசனே, அடுத்து வரும் வரியில் “ஆனால் கடவுள், கடவுளின் தூதர் என்று வருகிறபோது மனிதனின் வல்லமையைக் கொடி உயர்த்திப் பறக்கவிடுகிறார் என்றும் ஒப்புக் கொள்கிறார் (மூன்று பார்வைகள் - பக். 157). காலனும் கிழவியும். கதையில் எழுத்தறிவற்ற வெள்ளைக்கோயில் கிழவி மருதாயி, தன் உயிரைப் பறிக்க வந்த எமனை எந்தவிதப் பயமுமின்றி எதிர்கொண்டு, என்னமோ எமன் எமன் இன்னு பயமுறுத்திரியே. ஒன் தொழிலை ஒனக்குச் செய்யத் தெரிலியே, அதைத் தெரிஞ்சிக்கிட்டு எங்கிட்டவா என்று எமனிடம் கூறி, அவனிடம் அடிப்படையானதொரு கேள்வியை எழுப்பி, அவனைத்