பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 புதுமைப்பித்தன் கதைகள் காலத்தில் புதுமைப்பித்தன் அந்தக் கதையில் தம்மையறியாமலே ஒரு தவறு செய்திருந்தார். அதில், வரும் மருதப்ப மருத்துவனாரின் மனைவி காலமாகிவிட்டார். என்று கதையின் முற்பகுதியில் எழுதிவிட்டு, கதையின் பிற்பகுதியில் அவர் மனைவியின் கைத்தாங்கலில் தள்ளாடி வந்ததாக. எழுதியிருந்தார். இந்தத் தவற்றுடனேயே அந்தக்கதை மணிக்கொடியில் வெளிவந்திருந்தது. இந்தத் தவற்றைக் குறித்து, 'என் கதைகளும் நானும்' என்ற கட்டுரையில் . அவர் சுவையாகக் குறிப்பிட்டிருக்கிறார். (புதுமைப்பித்தன் கட்டுரைகள் - பக்.5). ஆனால் ‘நாசகாரக் கும்பல்' கதை தனிநூலாக வெளிவந்த காலத்தில் புதுமைப்பித்தன் இந்தத் தவற்றைத் திருத்திக் கதையைச் சீர்படுத்திக் கொடுத்திருந்தார். இந்தத் திருத்தத்தோடுதான் அக்கதை நூல் வடிவில் வெளிவந்தது என்பதே, இதனை உறுதிப்படுத்தும் சான்றாகும். இந்த உண்மைகனையெல்லாம் தெரிந்து கொள்ளாமல், புதுமைப்பித்தன் தெரிவு செய்து கொடுத்த கதைத் தொகுதிகள் ஆண்மை, காஞ்சனை, புதுமைப்பித்தன் கதைகள் ஆகிய மூன்று மட்டுமே என்று சாதித்து, தாம் தெரிவு செய்து கொடுத்த இந்தத் தொகுதிகளில் புதுமைப்பித்தன் தழுவல் கதைகளைப் புறக்கணித்துள்ளார் என்ற தமது நிலைப்பாடு சரியானதே என்று தமக்குத்தாமே பெருமை பாராட்டிக் கொள்ளும் வேதசகாயகுமார், அந்த கட்டுரையில் (காலச்சுவடு - இதழ் 13; 1996) தாம் இவ்வாறு முன்னர் கூறியதையே மறந்துவிட்டு, 'புதுமைப்பித்தன் கதைகள்' தொகுதியில் இடம் பெற்றுள்ள கதைகளில் இரண்டு கதைகள் தழுவல் கதைகள் என்று 'சான்றாதாரங்களோடு' குறிப்பிட்டுள்ளார் என்பதுதான் வேடிக்கை; விசித்திரம், அவற்றில் ஒன்று கவந்தனும் காமனும்' (மற்றொரு கதை என்ன என்பதைப் பின்னர் பார்ப்போம்). மேற்குறிப்பிட்டுள்ள கட்டுரையில் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்:

  • 22.7.34 மணிக்கொடி இதழில் வெளியான 'கவந்தனும் காமனும்' தழுவல் கதை என புதுமைப்பித்தன் கதைகளுக்கு கூட மதிப்புரை எழுதிய ரா.ஸ்ரீ.தேசிகன் கூட குறிப்பிட்டிருக்கிறார். ஆல்டஸ் ஹக்ஸ்லியின் கதை என மூலத்தைக்கூடக் குறிப்பிட்டிருக்கிறார்.'

இவ்வாறு அவர் எழுதியதற்கு ஆதாரம் என்ன? 1989 இல் வெளியான சிட்டியின் ‘தமிழில் சிறுகதை - வரலாறும் வளர்ச்சியும்' என்ற நூலில் காணப்படும் (நான் முன்னர் குறிப்பிட்டுள்ள.) அதே